மாலை நேரங்களில் மழை: வானிலை மையம் கணிப்பு | மாலை நேரங்களில் மழை: வானிலை மையம் கணிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாலை நேரங்களில் மழை: வானிலை மையம் கணிப்பு

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மாலை நேரங்களில் மழை: வானிலை மையம் கணிப்பு


‛சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில், லேசான மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை, தமிழகத்தை கடந்து, வட மாநிலங்களை நோக்கி தீவிரம் அடைந்துள்ளது. அதனால், சில தினங்களாக, சென்னை உட்பட பல இடங்களில் வெயில் அதிகரித்தாலும், நேற்று காலை முதல் வெயில் குறைந்தது. மாலையில், பெருங்களத்துார், தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லுார், கிண்டி, நந்தனம் உள்ளிட்ட இடங்களை சுற்றி, பலத்த மழை பெய்தது. 'இன்னும் இரு தினங்களுக்கு, சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை, 35 டிகிரி செல்சியசாக குறையும்; மாலை மற்றும் இரவு நேரங்களில், லேசான மழை பெய்யும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மாலை நேரங்களில் மழை: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், செங்குன்றத்தில், 2; சோழவரத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

- நமது நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
20-ஜூன்-201710:23:00 IST Report Abuse
P. SIV GOWRI வருணதேவா. ரொம்ப கருணை காட்டுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஜூன்-201708:07:45 IST Report Abuse
Srinivasan Kannaiya சென்னைக்கு வேண்டியது மழை,.,, இல்லை... ஆனால் குடிக்க நீர் வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
20-ஜூன்-201705:31:47 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அநேகமாபல டங்களிலே மாதம் ஒருமுறைதான் குடிநீர் சப்லை என்று நிலை எந்த மந்திரியாச்சும் vip யாச்சும் இந்த நிலையிலே இருக்கானுகளா ???????? மக்கள் என்றால் ஏன்னா அவ்ளோ இளப்பமா வோட்டுப்போடவே மட்டும் தான் இருக்கோமா? எவன் வோட்டுன்னுவந்தாலும் காலி குடத்தாலே மொத்தப்படுவானுக இது உண்மை நிலை , பல கோயில்கல் இருக்கு இந்த கோவிலே ஒரு கடவுளும் இரக்கமே காட்டலே ஆதுதானுங்க மஹாகொடுமை எங்களுக்கு மழை கொட்டவேண்டும் பூமிகூட நெனையலீங்கலே போர் போட்டால் மன்னுதான் வரதுங்கா கெஞ்சிகேட்கிறேன் வருணதேவா ப்ளீஸ் கருணை காட்டுங்க சாமி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை