லாரியில் மணல் திருட்டு: 6 பேர் அதிரடி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் மணல் திருட்டு: 6 பேர் அதிரடி கைது

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து, கருப்பத்தூர் காவிரி ஆற்றில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணியளவில், இரண்டு லாரிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம், சிலர் மணல் அள்ளில லாரிகளில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த லாலாப்பேட்டை போலீசார், மணல் அள்ளிய கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், கருப்பத்தூர் கோபால், 45; லாலாப்பேட்டை கொடிக்கால் தெரு செந்தில்குமார், 35; திருச்சி விஜய்ஆனந்த், 45; ஊட்டி ரவி, 32; பிள்ளபாளையம் அன்புநாதன், 29; வதியம் ராஜசேகரன், 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய, இரண்டு லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை