புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிணற்றுக்கு தடுப்புச்சுவர் அவசியம்: கபிலர்மலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, போதிய தடுப்புச்சுவர் இல்லாத, 50 அடி ஆழம் கொண்ட கிணறு அமைந்துள்ளது. அதன் அருகே பள்ளிக்கூடம் செயல்படுகிறது. அதனால், மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. எனவே, அந்த கிணற்றைச் சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வி.தங்கராஜன், கபிலர்மலை.

இரவு நேரத்தில் குடிமகன்கள் அட்டகாசம்: பள்ளிபாளையம் அடுத்த, சின்னார்பாளையம் பகுதியில், வாய்க்கால் ஓரத்தில் சாலை செல்கிறது. இங்கு, இரவு நேரத்தில் குடிமகன்கள் மது அருந்துகின்றனர். போதையில் அரை நிர்வாணத்துடன் படுத்துள்ளனர். சாலையில் செல்லும் போது மக்களுக்கும், குடிமகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. பெண்கள் அச்சப்பட்டு, மாற்றுப்பாதையில் செல்கின்றனர். அவர்களின் அட்டகாசத்தை தடுக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.செந்தில்குமார், சின்னார்பாளையம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை