வறட்சியால் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறை: காலிக்குடங்களுடன் மக்கள் கலெக்டரிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியால் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறை: காலிக்குடங்களுடன் மக்கள் கலெக்டரிடம் மனு

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க, பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் காலிக்குடங்களுடன் வருவது அதிகரித்துள்ளது.
* புதுச்சத்திரம் ஒன்றியம், தோப்பூர் மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில், கடந்த மே மாதம், அரசின் சார்பில், 720 அடி ஆழத்தில் போர்வெல் அமைக்கப்பட்டது. ஒன்றைரை இன்ச் தண்ணீர் வந்த நிலையில், போர்வெல்லின், 'லாடின்பிட்' உடைந்து, ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிக் கொண்டது. பணியை நிறுத்திவிட்டனர். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதை சரி செய்து, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* புதுச்சத்திரம் ஒன்றியம், நவணி ஊராட்சி, எடையப்பட்டி மக்கள் அளித்த மனு: போர்வெல் வற்றியதால், ஐந்து மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வசதி இல்லை. இரண்டு கி.மீ., நடந்து சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது. தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்கள் பகுதிக்கு போர்வெல் அமைத்து, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* திருச்செங்கோடு, பிள்ளாநத்தம் அருகே, காத்தான்காடு பகுதி மக்கள் அளித்த மனு: மூன்று ஆண்டுகளாக போர்வெல்லில் தண்ணீர் இல்லாததால், காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் பகுதியில் உள்ள போர்வெல்லை ஆழப்படுத்தி, குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தங்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை