பாதை ஆக்கிரமிப்பு குறித்து பகுதிவாசிகள் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதை ஆக்கிரமிப்பு குறித்து பகுதிவாசிகள் புகார்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'பள்ளி வாகனங்கள் வந்து செல்லும் பாதையை சரி செய்ய தனி நபர் மறுப்பதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது' என, முள்ளுக்குறிச்சி ஊராட்சி, தெப்பக்குலக்காட்டை சேர்ந்த மக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் அடுத்த, முள்ளுக்குறிச்சி ஊராட்சி, தெப்பக்குலக்காட்டில் வசித்து வருகிறோம். கிராமத்தின் மேற்குபுறம், பஞ்., ஊரணிக்கு நேர் வடப்புற எல்லை வரை செல்லும் பாதைக்கு இருபுறமும், எங்கள் விவசாய நிலம் உள்ளது. எங்கள் குழந்தைகள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். பள்ளி வாகனம் மற்றும் மக்களுக்கு இடையூறாக இருந்ததால், சாலையின் இருபுறமும் இருந்த முட்செடிகள், மரங்களை வெட்டி அகற்றினோம். தேவையான இடத்தில், அவரவர் நிலங்களை விட்டு பாதையை சரி செய்தோம். இப்பாதைக்கு சம்பந்தப்பட்ட ஒருவர், எங்களை வேலையை செய்யவிடாமல் தடுப்பதுடன், ஆக்கிரமித்துள்ள இடத்தை தரமறுக்கிறார். குழந்தைகளின் படிப்பு பாதிக்கிறது. பள்ளி வாகனங்கள், வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை