அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜூன் 20, 2017
Advertisement

சாக்கடையில் வீணாகும் குடிநீர்: நாமக்கல், பூங்கா சாலையில் உள்ள காமராஜர் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள சாக்கடை கால்வாயின் அடியில், நகராட்சி நிர்வாகத்தால் பதிக்கப்பட்டுள்ள, குடிநீர் குழாயில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து தண்ணீ வெளியேறி, சாக்கடையில் கலந்து வீணாகிறது. தற்போது, அந்த குழாயின் வழியாக, சாக்கடை கழிவுநீர் உள்ளே புகுந்து, தண்ணீர் குடியிருப்பு பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
சென்டர் மீடியன் பராமரிக்கப்படுமா? பள்ளிபாளையம் அடுத்த, தார்காடு பகுதியில், சாலையில் அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. கான்கிரீட் நாளுக்கு நாள் பெயர்ந்து வருகிறது. இதனால், இடைவெளி ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து, பலமுறை புகார் செய்தும் பலனில்லை. எனவே, 'சென்டர் மீடியனை பராமரிப்பு செய்ய, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

தூக்கி வீசப்பட்ட தகவல் பலகை: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் அடுத்த, வண்டிநத்தம் கிராமத்தில், கிராம ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக, முழு சுகாதார கிராமத்தை குறிக்கும் வகையில், பெயர் பலகை பல மாதங்களாக, சாலையின் ஓரத்தில் கிடக்கிறது. இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதுடன், அரசின் விதிமுறைகளை மீறுவதாகவும் உள்ளது. பலகையை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழாய் உடைப்பு; குடிநீர் வெளியேற்றம்: வெண்ணந்தூர் பி.டி.ஓ., அலுவலகம் அருகே, ராசிபுரம் - இடைப்பாடி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் அதிகளவில் வீணாகி வருகிறது. தண்ணீருக்காக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், இந்த உடைப்பினால், கடந்த ஒரு மாதமாகவே தண்ணீர் வெளியேறி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய, அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

வடிகால் வசதி அவசியம் தேவை: குமாரபாளையம் - பள்ளிபாளையம் சாலை, பைபாஸ் மேம்பாலம் அருகே, பூலக்காடு செல்லும் வழியில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையில் வழிந்தோடி துர்நாற்றத்தையும், சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. கொசு உற்பத்திக்கு காரணமாக அமைகிறது. தொற்றுநோய் பரவும் வாய்ப்பும் உள்ளது. இந்த வழியாக செல்லும் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். அதிக குடியிருப்புகள் உள்ள இந்த பூலக்காடு பகுதிக்கு, வடிகால் அமைக்க வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை