குடிநீர் வினியோகிக்கக் கோரி காலிக்குடங்களுடன் மறியல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வினியோகிக்கக் கோரி காலிக்குடங்களுடன் மறியல்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே, முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு ஒன்றியம், எஸ்.இறைய மங்கலம் ஊராட்சி, காட்டுவேலம்பாளையத்தில், 10 நாட்களாக, முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என, கூறப்படுகிறது. மேலும், கிராமத்தில், நான்கு இடங்களில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தண்ணீர் எடுத்து தனியார் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது. அவற்றை கண்டித்து, நேற்று காலை, 9:00 மணியளவில், ப.வேலூர் - கொக்கராயன்பேட்டை சாலையில், மக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் பூவராகவன், பி.டி.ஓ., சங்கர் ஆகியோர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைத்துத் தருவதாக உறுதி அளித்தனர். மேலும், உரிய அனுமதி இல்லாமல், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் விற்பனை செய்து வந்த, நான்கு ஆழ்துளை கிணறுகளுக்கும் தாசில்தார் சீல் வைத்தார். தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை