பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்கள் வந்து செல்ல கோரிக்கை

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'அனைத்து பஸ்களும், பழைய பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சேந்தமங்கலம் பொதுமக்கள், வியாபாரிகள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பல ஆண்டுகளாக சேந்தமங்கலம் நகரின் மத்தியில் இயங்கி வந்த, காமராஜர் பஸ் ஸ்டாண்ட், தற்போது, ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டப்பட்ட புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. பஸ்கள் அனைத்தும், புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்று வருகின்றன. காலை நேரத்தில், நகரின் முக்கிய சாலையில், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அதன் காரணமாக, போக்குவரத்து நெரிசலும், பயணிகளுக்கு பாதுகாப்பின்மையும் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட்டதால், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பஸ்கள் அனைத்தும், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக வந்து செல்ல ஆவண செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை