அபாய சாக்கடை கால்வாய்: சிலாப் அமைக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அபாய சாக்கடை கால்வாய்: சிலாப் அமைக்க வேண்டும்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூரில், திறந்தவெளி சாக்கடைக்கு சிலாப் வைத்து மூட கோரிக்கை எழுந்துள்ளது.
ப.வேலூர் டவுன் பஞ்., 15வது வார்டில், கழிவுநீர் கால்வாய் உள்ளது. பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், குறுகிய சாலையில் அமைந்துள்ள இந்த கழிவுநீர் கால்வாய், திறந்த வெளியாக உள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி அதில் விழக்கூடிய வாய்ப்பு உள்ளது. இரவு நேரத்தில், அப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோரும் விழ வாய்ப்புள்ளது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கழிவுநீர் கால்வாயில், நகரின் ஒட்டுமொத்த சாக்கடை நீரும் சேர்கிறது. வாரத்திற்கு ஒரு முறையேனும் அடைப்புகளை நீக்கி சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், திறந்தவெளியாக இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகமாகியுள்ளது. வாகன ஓட்டிகள் விழுவதற்கு வாய்ப்புள்ளது. சிலாப் அமைத்து, விபத்து மற்றும் சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை