குடிநீர் வால்வில் வீணாகும் தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வால்வில் வீணாகும் தண்ணீர்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: எலந்தகுட்டை பாலத்தின் அருகே, குடிநீர் வால்வு பகுதியில் இருந்து தண்ணீர் வீணாகி, அப்பகுதியில் ஆறு போல செல்கிறது. பள்ளிபாளையம் அடுத்த, எலந்தகுட்டை பாலத்தின் அருகே, பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இதன் வால்வு பகுதியில் இருந்து வீணாகும் தண்ணீர் அப்பகுதியில் ஆறாக செல்கிறது. இதனால், மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர். குடிநீர் வால்வு பகுதியில் பெரிய தொட்டி அமைத்து, வீணாகும் தண்ணீரை, தொட்டியில் சேமித்து வைத்து, மக்களுக்கு வினியோகம் செய்யலாம். அதை சரி செய்ய வேண்டும் அல்லது வீணாகும் தண்ணீரை, மக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, வெப்படையை சேர்ந்த பாலு கூறுகையில், ''குடிநீர் வாரிய அதிகாரி மற்றும் இலவச புகார் எண்ணில், பல முறை புகார் தெரிவித்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை