ஹூண்டாய் மையத்தில் பட்டமளிப்பு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹூண்டாய் மையத்தில் பட்டமளிப்பு விழா

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: ஹூண்டாய் இந்தியா கார் நிறுவனம் மற்றும் குமாரபாளையம், எக்ஸல் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து, தென்னிந்தியாவில் முதன்முறையாக, ஹூண்டாய் தொழிற் பயிற்சி மையம், பிப்ரவரியில் துவங்கப்பட்டது. எக்ஸல் பாலிடெக்னிக்கில், இறுதியாண்டு ஆட்டோமொபைல் படிக்கும், 20 மாணவ, மாணவியருக்கு தொழில்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் ஹூண்டாய் டீலர்ஷிப் நிறுவனங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, நியமன ஆணை வழங்கும் விழா, எக்ஸல் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் மதன் கார்த்திக் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் முதல்வர் சிவகுமார் வரவேற்றார். தொழிற்சாலை உறவுகள் மற்றும் ஆய்வுத்திட்ட இயக்குனர் தேவகுமார் பயிற்சி அறிக்கை வாசித்தார். ஆர்.பி.எஸ்.எம்.பிரிவு கள உதவி தெற்குப்பிரிவு- 1 அலுவலர் ஸ்ரீவத்சன், மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பணி நியமன ஆணை வழங்கினார். முன்னதாக, வளாகத்தேர்வில் பயிற்சி முடித்த, 20 மாணவர்களையும், ஹூண்டாய் டீலர்கள், தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை