பைக் - டிராக்டர் மோதல்: பெண் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் - டிராக்டர் மோதல்: பெண் காயம்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: நல்லூர் கந்தம்பாளையம் அருகே, டிராக்டர் - பைக் மோதிய விபத்தில் பெண் படுகாயமடைந்தார். ப.வேலூர் அருகே, ஜேடர்பாளையம் அடுத்த, கபிலர்மலை மேற்குத் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது தாய் கண்ணம்மாள், 56. இருவரும், நேற்று வாவிபாளையம் சென்றுவிட்டு ஸ்பிளண்டர் பைக்கில் ஊர் திரும்பினர். பகல், 11:00 மணியளவில், கணக்கன்பாளையம் என்ற இடத்தில், முன்னால் சென்ற டிராக்டர் வலதுபுறம் செல்லும் பிரிவு சாலையில் திரும்பியது. அப்போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது பைக் மோதியது. இதில், கண்ணம்மாளுக்கு கைமுறிவு ஏற்பட்டது. செருக்களைபுதூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் செல்வராஜிடம்,36 நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை