லாட்டரி விற்பனை: இருவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

லாட்டரி விற்பனை: இருவர் கைது

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ஆண்டகளூர்கேட் அருகே, லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர். ராசிபுரம் அடுத்த, ஆண்டகளூர்கேட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக கிடைத்த தகவல் படி, ராசிபுரம் போலீசார், நேற்று மாலை, 5:00 மணியளவில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், அங்குள்ள சைக்கிள் கடை எதிரே உள்ள, கடையை சோதனை செய்ததில், ராசிபுரம், தெற்குபட்டி விஸ்வநாதன், 33, கரையான்தின்னிபுதூர் குமார், 34, ஆகிய இருவரும், வெள்ளை நிற துண்டு சீட்டில் வாடிக்கையாளர்களுக்கு எண்களை எழுதிக் கொடுத்தது தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில், இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை