24 கோடி பேர் காஸ் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்: அமைச்சர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

24 கோடி பேர் காஸ் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்: அமைச்சர்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ''24 கோடி பேர் சமையல் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்,'' என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், மத்திய அரசின், மூன்றாண்டு கால சாதனை விளக்க கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஜன்தன் திட்டம் காரணமாக, 29 கோடி வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. உலகிலேயே, அதிக விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது. பிரதமர் அறிமுகப்படுத்திய, விபத்து காப்பீடு திட்டத்தில், இதுவரை, 10 கோடி பேர் சேர்ந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், ஒரு லட்சத்து, 75 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இதுவரை, தேசிய அளவில், 24 கோடி பேரும், தமிழகத்தில், 23 லட்சம் பேரும் சமையல் காஸ் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 9,000 குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை