15 கிராமங்களுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய வனத்துறையினர் திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

15 கிராமங்களுக்கு 1 லட்சம் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய வனத்துறையினர் திட்டம்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டத்தில், 15 கிராமங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ்நாடு, உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் சார்பில், வனத்துறை மூலம் இலவச மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், 15 கிராமங்களில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, நாமக்கல் வனவியல் விரிவாக்க அலுவலர் சேகர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், மாவட்டத்தில், 15 கிராமங்களை தேர்வு செய்து விவசாயிகளுக்கு, தேக்கு, பெருமரம், வேம்பு, மலைவேம்பு போன்ற மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, இறையமங்கலம், ஆத்திரப்பட்டி, சின்னதம்பிபாளையம், கைலாசம்பாளையம், கோட்டபாளையம், சிறுமொளசி, வடகரையத்தூர், பல்லக்காபாளையம், படவீடு, மொளசி, திருத்தி, திடுமல், பெரியசோழிபாளையம், குப்பிரிக்கபாளையம், வில்லிபாளையம் ஆகிய கிராமங்களை தேர்வு செய்துள்ளோம். மேற்கண்ட கிராமங்களில் இருந்து மரக்கன்றுகள் கேட்டு, 126 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு, 99407 64366, 90426 42665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை