வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூரில், வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர். ப.வேலூரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 24. இவர், கடந்த, 18 காலை, 9:00 மணியளவில், மோகனூர் பிரிவு சாலையிலுள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது, டூவீலரில் வந்த மூவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, 1,450 ரூபாயை பறித்துச் சென்றனர். இந்நிலையில், அன்று மதியம், 1:00 மணியளவில், ப.வேலூர், நான்கு சாலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியே டூவீலரில் வந்த மூவரை விசாரித்தனர். அதில், சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி நாகராஜ், 36, கொண்டலாம்பட்டி ராஜமாணிக்கம், 29, நாமக்கல் அடுத்த, பொம்மம்பட்டி மாதேஸ், 27 என்பதும், ராஜேஷ்குமாரிடம் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை