சைக்கிள் மீது பைக் மோதல்: கூலித்தொழிலாளி பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சைக்கிள் மீது பைக் மோதல்: கூலித்தொழிலாளி பரிதாப பலி

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: சின்னதம்பிபாளையத்தில், பைக் மோதியதில், தொழிலாளி உயிரிழந்தார். திருச்செங்கோடு தாலுகா, சின்னதம்பிபாளையம் அடுத்த, பிள்ளாங்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கந்தசாமி, 60. இவர், நேற்று காலை, 5:30 மணியளவில், குடங்களில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, சின்னதம்பிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே, சைக்கிளில் சென்றார். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து, மோர்பாளையம் நோக்கிச் சென்ற கிரக்ஸ் பைக், சைக்கிளின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில், கீழே விழுந்த கந்தசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், காலை, 7:00 மணிக்கு உயிரிழந்தார். மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை