ஆட்டோ டிரைவரை கொன்றதாக ஒத்துக்கொள்ள போலீசார் துன்புறுத்தல்: குடும்பத்துடன் பெற்றோர் தீ குளிக்க முயற்சி | Dinamalar

ஆட்டோ டிரைவரை கொன்றதாக ஒத்துக்கொள்ள போலீசார் துன்புறுத்தல்: குடும்பத்துடன் பெற்றோர் தீ குளிக்க முயற்சி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தர்மபுரி: ஆட்டோ டிரைவரை கொலை செய்ததாக ஒத்துக்கொள்ள வேண்டும் என, போலீசார் துன்புறுத்துவதாக, அவரின் பெற்றோர், குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.


தர்மபுரி அடுத்த ஜாலிக்கொட்டாயை சேர்ந்த கோவிந்தன் மகன் கண்ணன், 22. ஆட்டோ டிரைவரான இவர், கடந்த மே, 26ல், வீட்டில் இருந்து திடீர் என மாயமானார். இதுகுறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் படி, மதிகோன்பாளையம் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த, 1ல், ஜாலிக்கொட்டாய் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியில், அழுகிய நிலையில் கண்ணனின் சடலத்தை போலீசார் மீட்டனர். இந்த கொலையில், போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இறந்த கண்ணனின் பெற்றோர் கோவிந்தன், பூவாத்தாள் உட்பட உறவினர்களை அழைத்துச் சென்று, போலீஸ் ஸ்டேசனில் இரவு வரை வைத்திருந்து விசாரித்துள்ளனர். மேலும் அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த, இறந்த கண்ணனின் தந்தை கோவிந்தன், 44, தாய் பூவாத்தாள், 42, அண்ணன் சின்னசாமி, 26, அண்ணி ரோஜா, 22, சித்தி பூங்கொடி, 38, ஆகியோர், நேற்று காலை, 11:00 மணிக்கு, தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மண்ணெண்ணையை தங்கள் உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது அவர்கள், 'கண்ணனை, நாங்கள் தான் கொலை செய்தோம் என, ஒத்துக்கொள்ளும் படி போலீசார் அடித்து துன்புறுத்துகின்றனர். அவர்களிடம் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும்' என்று கூறி, அங்கிருந்த போலீசார் மற்றும் அதிகாரிகளில் காலில் விழுந்து கதறினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, ஐந்து பேரையும், தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.