ஜாதி சான்றிதழ் வழங்க கோரி நடனமாடியபடி வந்த மக்கள்| Dinamalar

ஜாதி சான்றிதழ் வழங்க கோரி நடனமாடியபடி வந்த மக்கள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு, ஜாதி சான்றிதழ் கேட்டு, ஆடி, பாடி வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகா, பொம்மஅள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, அண்ணாநகரில் வசிக்கும் இருளர் இன மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு எஸ்.டி., சான்றிதழ் கேட்டு, பாட்டுப்பாடி, நடனமாடியபடி வந்தனர்.
இதுகுறித்து, இவர்கள் கூறியதாவது: பொம்மஅள்ளி பஞ்., அண்ணாநகரில், 100க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மலைவாழ் மக்களாகிய எங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பாக, இன்று வரை ஜாதி சான்றிதழ் மற்றும் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தராமல் உள்ளனர். குறிப்பாக, ஜாதி சான்றிதழ் வழங்காததால், எங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே, எங்கள் குழந்தைகளுக்கு உடனடியாக, எஸ்.டி., சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இவர்களிடம் பேச்சுவார்தை நடத்திய, ஆர்.டி.ஓ., ராமமூர்த்தி, நாளை (இன்று) நேரில் வந்து விசாரித்து, அனைவருக்கும் ஜாதி சான்றிதழ் வழங்கப்படும் என, உறுதியளித்தை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.