ஆலை கழிவுகளால் மாசு: பராமரிக்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலை கழிவுகளால் மாசு: பராமரிக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: தொழிற்சாலைகளால் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி, பெருந்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், ஈரோடு டி.ஆர்.ஓ., கவிதாவிடம் மனு வழங்கினர். மனு வழங்கியவர்கள் கூறியதாவது: பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள பல சாய தொழிற்சாலைகளில் சாய கழிவு நீர், சுத்திகரிக்கப்படாமல், நிலத்தில் விடப்படுகிறது. அடர் திடக்கழிவுகள், மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக செயல்படுவதால், போதிய பராமரிப்பின்றி தண்ணீர், காற்று, நிலம் என அனைத்திலும் மாசு ஏற்படுத்துகிறது. மாவட்ட நிர்வாகம் குழு அமைத்து, ஆய்வு செய்து, காற்று, நீர், நிலம் மாடுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை