கஸ்பாபேட்டை பஞ்., அலுவலகம் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கஸ்பாபேட்டை பஞ்., அலுவலகம் முற்றுகை

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி வட்டாரம் கஸ்பாபேட்டை பஞ்சாயத்து, அண்ணாநகர் காலனி பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு பாளிமேட்டில் ஆழ்குழாய் அமைத்து, குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் பாளிமேடு பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர், குழாயை அடைத்தனர். இதனால் அண்ணாநகர் காலனி மக்களுக்கு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணியளவில், 80க்கும் மேற்பட்ட அண்ணாநகர் காலனி மக்கள், கஸ்பாபேட்டை பஞ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாலுகா போலீசார் வந்து, அலுவலகத்தை திறந்தனர். இரு தரப்பினரையும் அழைத்து பேசினர். இதில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் தருமாறு அறிவுறுத்தினர். அண்ணாநகர் மக்கள் சம்மதிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை