51 வயது ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு: சென்னிமலை ஆசிரியர் தம்பதி மீது வழக்குப்பதிவு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

51 வயது ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு: சென்னிமலை ஆசிரியர் தம்பதி மீது வழக்குப்பதிவு

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னிமலை: பாலியல் தொந்தரவு, கொலை மிரட்டல் தொடர்பாக, ஆசிரியர் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் குற்றச்சாட்டு தெரிவித்த, ஆசிரியை மீதும், புகார் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, குமரன் சதுக்கம் அருகே, அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு, எட்டாம் வகுப்பு வரை, 140க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பள்ளி ஆசிரியை ரமா பார்வதி, 51; இவர் சென்னிமலை போலீசில், நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பள்ளியில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் முருகன், 38, பாலியல் ரீதியாக தொந்தரவு தருகிறார். தட்டிக் கேட்டபோது ஆபாசமாக திட்டி தாக்கினார். கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார். இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் அவர் மனைவி ஜெயலட்சுமியிடம், 35, சொன்னேன். அவரும் ஆபாசமாக பேசி மிரட்டினார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். இதன்படி ஆசிரியர் தம்பதி மீது, பொது இடத்தில் தகாத வார்த்தையில் திட்டுவது, வலுக்கட்டாயமாக அடித்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டம் என, ஐந்து பிரிவுகளில், இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம், வழக்குப் பதிவு செய்துள்ளார்.

அதேசமயம் ரமா பார்வதி, ஜாதி பெயரை சொல்லி, தங்களை திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஆசிரியர் தம்பதியும் புகார் தந்துள்ளனர். இதுகுறித்து பெருந்துறை டி.எஸ்.பி., முருகன் விசாரிக்கிறார். கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் புகாருக்கு உள்ளான, மூன்று ஆசிரியர்களையும் வேறு மாவட்டத்துக்கு மாற்ற, சமூக மேம்பாட்டுக்கான கல்வி இயக்கம், வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த பள்ளியில்தான், கொடி காத்த வீரனும், விடுதலை வீரனுமான, தியாகி குமரன் படித்தார். பெருமை வாய்ந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பரஸ்பரம் புகார் தெரிவித்து, போலீஸ் வரை சென்றது, ஆசிரியர்கள் மற்றும் சென்னிமலை பகுதி மக்களை, அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை