அமைச்சர் பதவி கேட்கல... திட்டம்தான் கேட்டேன்: பெருந்துறை எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பதவி கேட்கல... திட்டம்தான் கேட்டேன்: பெருந்துறை எம்.எல்.ஏ., பரபரப்பு பேச்சு

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பெருந்துறை: ''அமைச்சர் பதவி கேட்கவில்லை; பெருந்துறை தொகுதிக்கு, ஜெ., அறிவித்த திட்டத்தை தான் கேட்டேன்,''என, பெருந்துறை, எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம், ஊழியர் கூட்டத்தில் பேசினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அ.தி.மு.க., தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில், கட்சி ஊழியர் கூட்டம், நேற்று மாலை நடந்தது. இதில் அவர் பேசியதாவது: கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோது, எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி தருவதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஆனால், ஜெ., உயிருடன் இருந்தபோது, பெருந்துறை தொகுதிக்கு, 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்த கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை மட்டும் நிறைவேற்றித் தந்தால் போதும். மாவட்டச் செயலாளர் பதவி வேண்டாம் என மறுத்தேன். அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு, தலைமைச் செயலகத்தில் சந்தித்து, மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை பெருந்துறையில் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க, கோரிக்கை வைத்தேன். ஆனால், அமைச்சர் பதவி கேட்டு, ஆட்சிக்கு நெருக்கடி தருவதாக வெளியான செய்திகள் தவறானது. இந்த உண்மை முதல்வரின் மனசாட்சிக்குத் தெரியும். கடந்த, 11ல், ஈரோட்டில் நடந்த முதல்வர் நிகழ்ச்சியில், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என நினைத்தேன். அதில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதனால் தான் முதல்வர் விழாவுக்கு செல்லவில்லை. மற்றபடி, புறக்கணிக்கும் எண்ணம் இல்லை. இந்த ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார். சில நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர். தொகுதிக்கு உட்பட்ட, 90 சதவீத நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணித்தனர். மேடையில் இருந்த பேனரில், எம்.ஜி.ஆர்., - ஜெ., படம் மட்டுமே இருந்தது.

மேடையில் வாரிசு: தோப்பு வெங்கடாச்சலத்தின் ஒரே மகன் திவாகர் சக்திவேல், 24; இவர். பி.இ., படித்துள்ளார். தற்போது தந்தையின் மணல் வியாபாரத்தை கவனித்து வருகிறார். இதுவரை கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்த திவாகர், நேற்று நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகளுடன் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை