பள்ளியில் இடம் வழங்க அனுமதி மறுப்பு; 'மாடு மேய்ப்பதை தவிர வேறுவழியில்லை' என மாணவன் விரக்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் இடம் வழங்க அனுமதி மறுப்பு; 'மாடு மேய்ப்பதை தவிர வேறுவழியில்லை' என மாணவன் விரக்தி

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: 'அரசு உதவி பெறும் பள்ளியில், இடம் வழங்காததால், மாடு மேய்ப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை' எனக்கூறி, ஈரோடு, டி.ஆர்.ஓ.,விடம், மாட்டுடன் வந்து, மாணவன் மனு அளித்தார்.
ஈரோடு, கருங்கல்பாளையம் பூங்குன்றனார் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் மகன் தினகரன், 14. இவர், கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு, ஈரோடு செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி), ஒன்பதாம் வகுப்புக்கு விண்ணப்பித்தார். அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்த, மக்கள் குறைதீர் முகாமுக்கு, மாட்டுடன் மனு கொடுக்க வந்தார். மாணவன் கூறியதாவது: கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக அப்பள்ளியில் சேர முயல்கிறேன். 'டெஸ்ட்' வைக்க வேண்டும்; தாளாளரை பார்க்க வேண்டும்; தலைமை ஆசிரியரை பார்க்க வேண்டும் என, இழுத்தடித்தனர். பின், டெஸ்டில், தேர்ச்சி பெறவில்லை என, அலைக்கழித்தனர். கடைசியாக, 'சீட்' இல்லை என அனுப்பி விட்டனர். எனக்கு அங்கு படிக்க விருப்பம். எனக்கு இடம் கிடைக்காததால், மாடு மேய்க்க செல்வதை தவிர, வேறு வழி தெரியவில்லை. கலெக்டரிடம் புகார் தெரிவித்து, படிக்க வாய்ப்பு பெற்றுத்தர வேண்டும். அதற்காக, மனு கொடுக்க மாட்டுடன் வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மனுவை பெற்றுக் கொண்ட டி.ஆர்.ஓ., கவிதா, கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்க பரிந்துரைத்தார். அவர்கள் விசாரித்து, 'சீட்' பெற்றுத் தருவதாக, மாணவனிடம் உறுதியளித்தனர். இதையடுத்து, மாட்டை அழைத்து கொண்டு மாணவன் திரும்ப சென்றார். கோரிக்கையை வலியுறுத்தி, அமைப்புகளை சேர்ந்தவர்கள், குறைதீர்க்கும் முகாமில், நூதன முறையில் போராட்டம் நடத்துவர். ஆனால், ஒரு மாணவன், பள்ளியில் இடம் கேட்டு, மாட்டுடன் வந்து, மனு கொடுத்தது, அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை