3 ஆசிரியர்களும் இல்லை; சம்பளத்துக்கு வழியுமில்லை: பள்ளி கல்வி துறை அமைச்சர் மாவட்டத்தில் அவலம்| Dinamalar

3 ஆசிரியர்களும் இல்லை; சம்பளத்துக்கு வழியுமில்லை: பள்ளி கல்வி துறை அமைச்சர் மாவட்டத்தில் அவலம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், மூன்று ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதால், ப்ளஸ் 1 மாணவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியர் , 905 பேர் படிக்கின்றனர். இப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, ஆறு ஆண்டுகள் ஆகியும், எக்கனாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்ஸி ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், தலா, 6,500 ரூபாய் சம்பளத்தில் கடந்த ஆறு ஆண்டாக ஆசிரியர்களை நியமித்தனர். அவர்களுக்கு வேறு பள்ளியில், கூடுதல் சம்பளம் கிடைத்ததும், இங்கிருந்து சென்றுவிட்டனர். இந்தாண்டுக்கு, 7,500 ரூபாய் சம்பளத்துக்கு ஆசிரியர் கிடைக்கவில்லை. நடப்பாண்டு முதல், ப்ளஸ் 1 வகுப்புக்கும், அரசு பொதுத்தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளதால், ப்ளஸ் 1 மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேற்று காலை, ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செங்கோட்டையன், பெற்றோர் மற்றும் மாணவர்கள் வந்து, மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பள்ளிக்கு நிரந்தரமாக, அனைத்து ஆசிரியர்களையும் நிரப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் போதிய நிதி இல்லாததால், மாதம், மூன்று ஆசிரியருக்கும் சேர்த்து, 23 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க இயலவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் அல்லது கல்வித்துறை மூலம் ஆசிரியரை நியமியுங்கள். அதுவரை வேறு பள்ளி ஆசிரியரை, எங்கள் பள்ளியில் வகுப்பு எடுக்க உத்தரவிடுங்கள். இவ்வாறு கூறினர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையனின், சொந்த மாவட்டமான, ஈரோடு மாவட்டத்தில் பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பி.டி.ஏ., மூலமே ஆசிரியர்கள் பணி செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.