அதிக விளைச்சலால் வத்தல் விலை ரூ.70 வரை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக விளைச்சலால் வத்தல் விலை ரூ.70 வரை சரிவு

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: பல மாநிலங்களில் அதிகப்படியான விளைச்சலால், மிளகாய் வத்தல் விலை, 70 ரூபாய் வரை சரிந்துள்ளது.
இதுபற்றி, ஈரோடு கொங்காலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் விமல் கருப்பணன் கூறியதாவது: தமிழகத்தில் கொளத்தூர், மூலனூர், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை மாவட்டம், கர்நாடகாவில் இந்துப்பூர், தும்கூர், பேரங்கி மற்றும் ஆந்திரா, மத்திய பிரதேசத்தில் அதிக அளவில் மிளகாய் வத்தல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் விளைச்சல் அதிகரித்ததால், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு வரை, ஒரு கிலோ வத்தல், 150 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாக குறைந்துள்ளது. சற்று நிறம் குறைந்து, சன்னமாக உள்ள மிளகாய் வத்தல், 42 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு இந்த ரகம், 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால், பல மாநிலங்களில், ஏ.சி., குடோன்களில் வத்தலை இருப்பு வைத்துள்ளனர். குறிப்பாக ஆந்திராவில் மிக அதிகமாக விளைச்சல் இருந்ததால், ஏ.சி., குடோனில் வைத்த வத்தலை விற்பனைக்கு எடுக்க வேண்டாமென அரசு யோசனை தெரிவித்தது. நடப்பு பருவத்தில் விளைச்சல் கண்ட வத்தலை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பழைய வத்தலை வெளியே கொண்டு வந்து, புதிய வத்தலை இருப்பு வைப்பதால், பலனில்லை என அறிவித்தனர். இதனால், விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் விளைச்சல் கொண்ட வத்தலை, அரசே கொள்முதல் செய்து, பிற இடங்களுக்கு விற்பனை செய்வதுடன், இருப்பும் வைக்கிறது. எனவே, வரும் மாதங்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் பருவமழையின்போது, வத்தலுக்கான மிளகாய் சாகுபடி பரப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழை மற்றும் சாகுபடி பரப்புக்கு ஏற்ப, வத்தல் விலை சில மாதங்களுக்குபின், உயரவும், குறையவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை