கோபியில் தேங்காய் நாரில் கயிறு தயாரிப்பு ஜோர்: கேரளாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் தேங்காய் நாரில் கயிறு தயாரிப்பு ஜோர்: கேரளாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோபி: கோபி சுற்றுவட்டார பகுதிகளில், தேங்காய் நாரில் கயிறு தயாரிக்கும் தொழில் ஜோராக நடக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில், தேங்காய் நார் பண்டலாக தயாரிக்கப்படுகிறது. இந்த நார்களை கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கயிறு தயாரிக்கப்படுகிறது. இத்தொழில் குறிப்பாக, ஈரோடு மாவட்டம், கோபி, பெருந்தலையூர், மாரப்பம்பாளையம், ஆப்பக்கூடல், பி.மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில், அதிக அளவில் நடக்கிறது.

இதுகுறித்து பெருந்தலையூர் கயிறு தயாரிப்பாளர், தேவேந்திரன் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டுகளாக, கயிறு தயாரிக்கும் தொழிலில், ஈடுபட்டுள்ளோம். சராசரியாக, 30 கிலோ எடை கொண்ட நார் பேல், 650 ரூபாய்க்கு வாங்கி வருகிறோம். அவற்றை ஸ்பின்னிங் இயந்திரம் மூலம், கயிறாக தயாரிக்கிறோம். மொத்தம் எட்டு விதமான அளவில், கயிறுகள் உருவாக்கப்படுகிறது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, சீசன் காலமாக, கயிறு தயாரிப்பு கருதப்படுகிறது. கேரளா வியாபாரிகள், அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் இருந்து, 70 சதவீதம் கேரளா போகிறது. அங்கு கால் மிதியடியாக மாற்றி, ஆஸ்திரேலியா மற்றும் வட ஆப்பிரிக்க ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஒரு கிலோ கயிறு சில்லரை விலையாக, 50 ரூபாய், மொத்த விலையாக, 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். இதில் மாதத்துக்கு சராசரியாக, 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் பெறலாம். ஓரளவுக்கு லாபம் தரும் தொழிலாக விளங்குகிறது. தமிழக கயிறுகளுக்கு, கேரளாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை