தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளதா தமிழக அரசு: பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கேள்வி| Dinamalar

தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளதா தமிழக அரசு: பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா கேள்வி

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கரூர்: ''தமிழக அரசு, முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளதா; தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளதா,'' என, பா.ஜ., தேசிய செயலாளர் ராஜா, கரூரில் கேள்வி எழுப்பினார்.
கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் வீடுகள் வழங்கும் திட்ட விண்ணப்பத்தில், பிரதமர் மோடியின் புகைப்படத்தை, தமிழக அரசு போட வேண்டும். மாநில அரசின் திட்டங்களை, மத்திய அரசு சொந்தம் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், மத்திய அரசின் திட்டத்தை இருட்டடிப்பு செய்வதை அனுமதிக்க முடியாது. தமிழக அரசு, முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ளதா; தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளதா என்பது தெரியவில்லை. பிரதமரை தரக்குறைவாக பேசிய, திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். முன்னதாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில், 'அனைவரும் இணைவோம்; அனைவரும் வளர்வோம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் பங்கேற்றனர். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தில், கரூர் அடுத்த, ஆண்டாங்கோவில் சாலையில், குப்பையை அகற்ற, எச்.ராஜா, நிர்வாகிகளுடன் வந்தார். சாலையோரம் கிடந்த குப்பையை, அவர் அள்ளி, தொண்டர்களிடம் வழங்கினார். சில நிமிடங்கள் கழித்து, காரில் ஏறி உட்கார்ந்த போது, அங்கிருந்த சிலர், 'பென்னிக்குயிக் நகர், ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில், பல ஆண்டுகளாக குப்பை தேங்கியுள்ளதால், அதை அள்ள வாருங்கள்' என்றனர். அதை கேட்ட, எச்.ராஜா, 'உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளிடம் கூறுங்கள்' எனக்கூறிவிட்டு கிளம்பியதால், மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Sakthi - Nemathanpatti,இந்தியா
20-ஜூன்-201711:18:06 IST Report Abuse
Narayanan Sakthi வெறும் புகைப்படுத்துக்கே இப்படின்னா உண்மையா ஜெயலலிதா மாதிரி காவேரியை கொண்டுவர முயற்சி செய்தார் என்றால் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.