மாட்டிறைச்சிக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரசாரம் செய்த வாலிபர் அதிரடி கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாட்டிறைச்சிக்கு ஆதரவாக பேஸ்புக்கில் பிரசாரம் செய்த வாலிபர் அதிரடி கைது

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், மாட்டிறைச்சிக்கு ஆதரவாக பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்தவர் சாதிக் பாஷா, 26. அப்பகுதியில் மாட்டிறைச்சி கடை நடத்தி வரும் இவர், கடந்த, 6ல், மொபைல்போனில் ஒரு வீடியோ எடுத்துள்ளார். அதில், மாட்டின் தலையை தொங்க விட்டு, 'மாட்டையும் வெட்டுவோம். அதை கேட்க வருபவனின் தாயின் தலையையும் வெட்டுவோம்' என, உருது மொழியில் கூறி, வாளை உயர்த்தி காட்டி, கொலை மிரட்டல் விடுப்பது போல் பேசியுள்ளார். இந்த வீடியோ பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டதால், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத்தலைவர் ரங்கநாத், 35, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த சாதிக்பாஷாவை நேற்று கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை