எண்ணை சட்டியில் தவறி விழுந்த சிறுமி பரிதாப பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எண்ணை சட்டியில் தவறி விழுந்த சிறுமி பரிதாப பலி

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, எண்ணை சட்டியில் தவறி விழுந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அந்தேரி அடுத்துள்ள சாகர் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சகில்கான். இவரது மகள் ஷபானா, 11. இவர் மும்பையில் உள்ள உருது பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறைக்காக, கிருஷ்ணகிரி அருகே சோமநாதபுரத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு வந்தார். கடந்த, 28ல், ஷபானாவின் பாாட்டி சமோசா செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஷபானா, நிலை தடுமாறி கொதிக்கும் எண்ணை சட்டியில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஷபானா, நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை