கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது: நாமக்கல்லில் மத்திய அமைச்சர் பேட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது: நாமக்கல்லில் மத்திய அமைச்சர் பேட்டி

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ''தமிழகத்துக்கு நல்ல காலம் பிறந்து கொண்டிருக்கிறது. கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது,'' என, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மாவட்ட, பா.ஜ., சார்பில், மாவட்ட இளைஞரணியினருடன் கலந்துரையாடல், மரக்கன்று நடும் விழா, மத்திய அரசின், மூன்றாண்டு சாதனை விளக்கக் கூட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள், நாமக்கல்லில் நேற்று நடந்தன.

மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த விவகாரத்தில், தேர்தல் கமிஷன் யார், யார் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என கூறி உள்ளதோ அது நிகழ்ந்தாக வேண்டும். வரி விதிமுறைகள், மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசம் உள்ளது. ஒரே வரி என்ற நிலை வரும் போது ஏற்படும் சிறு, சிறு பிரச்னைகளை பேசி நல்ல தீர்வு காணலாம். எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மையை நிரூபிக்க பணம் பெற்றதாக, 'சிடி' ஆதாரம் இருப்பதாக, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறிவது முறையல்ல. தமிழகத்தில் நிலையில்லா ஆட்சிக்கும், மத்திய அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க., பல குழுக்களாக பிரிந்து செல்வது நல்லதல்ல. தமிழகத்துக்கு நல்ல காலம் பிறந்து கொண்டிருக்கிறது. கழகங்களின் ஆட்சி அழிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை