தென் ஆப்பிரிக்கா சென்றவரிடம் பாஸ்போர்ட் பறிப்பு: கணவரை மீட்டுக் கோரி கலெக்டரிடம் பெண் கதறல்| Dinamalar

தென் ஆப்பிரிக்கா சென்றவரிடம் பாஸ்போர்ட் பறிப்பு: கணவரை மீட்டுக் கோரி கலெக்டரிடம் பெண் கதறல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: 'ஒப்பந்த அடிப்படையில், தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஹானாவுக்கு, ரிக் வண்டியில் டிரில்லராக பணியாற்ற சென்ற, என் கணவரின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதால், அங்கு பரிதவிக்கிறார். அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மனைவி, நாமக்கல் கலெக்டரிடம மனு அளித்துள்ளார்.
திருச்செங்கோடு அடுத்த பிள்ளாநத்தம் மூணாம் பள்ளிக்காட்டு வலவை சேர்ந்த சகுந்தலா, 34, நாமக்கல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டம், களங்காணியில் உள்ள, மகாஸ்ரீ நிறுவனத்த்துக்கு சொந்தமான ரிக் வண்டி, தென்னாப்பிரிக்கா நாட்டில் ஹானாவில் இயங்கி வருகிறது. அதில், என் கணவர் ராஜேந்திரன்,40, ரிக் டிரில்லராக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு, கடந்த, பிப்., 13ல், அழைத்துச் சென்றனர். அங்கு சென்றவுடன், என் கணவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், என் கணவருக்கும், ரிக் வண்டி உரிமையாளருக்கும், கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால், என் கணவரின் பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பறித்துக் கொண்டதுடன், பணம் தராமல் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றினர். கையில் பணம் இல்லாமல், சாப்பிட வழியின்றி பரிதாபப்தோடு, ஹானாவில் தவித்துக் கொண்டிருக்கிறார். மேலும், என் கணவரை அங்கேயே கொன்று விடுவேன், யாரும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டுகின்றனர். எனக்கு, பிளஸ் 2 படிக்கும் ஒரு மகனும், எஸ்.எஸ்.எல்.ஸி., படிக்கும் மகளும் உள்ளனர். அவர்கள், தந்தையின் நிலையை அறிந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர். அதனால், அவர்கள் மனஉளச்சல் மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் நிலையை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட நிறுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வெளிநாட்டில் தவிக்கும் என் கணவரை, பாதுகாப்புடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.