மாதிரி பள்ளி மாணவர் தற்கொலை விவகாரம்: வழக்கை மாற்றம் செய்வதில் சிக்கல் நீடிப்பு| Dinamalar

மாதிரி பள்ளி மாணவர் தற்கொலை விவகாரம்: வழக்கை மாற்றம் செய்வதில் சிக்கல் நீடிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கொளத்தூர்: ஆசிரியர்கள், பெற்றோர் இடையே நீடிக்கும் மறைமுக பிரச்னையால், மாதிரி பள்ளி மாணவர் தற்கொலை வழக்கை மாற்றம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.
சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், மாங்காடு, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 401 மாணவர்கள் படிக்கின்றனர். அருகிலுள்ள ரங்கபோயன்காடு கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி மாதேஷ் மகன் நந்தகுமார், 2016-17 ல், பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தார். கோடை விடுமுறை முடிந்து கடந்த, 7ல் பள்ளிக்கு சென்ற மாணவர் நந்தகுமார், 10ம் வகுப்பில் அமர்ந்துள்ளார். இரு நாட்கள், 10 வகுப்பில் இருந்த மாணவர் நந்தகுமாரிடம், பெயில் ஆகி விட்டதால், ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும்படி கூறி, 10ம் வகுப்பு பாடபுத்தகங்களை ஆசியிரியரகள் திரும்ப பெற்று விட்டனர். மனமுடைந்த மாணவர் கடந்த, 10ல், வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். மகனை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள், ஜான் பிரேம்குமார், நித்தியானந்தன், சுந்தரராஜன், ப்ரியதர்சினி மீது நடவடிக்கை எடுக்ககோரி தந்தை மாதேஷ் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். முதல்கட்டமாக கொளத்தூர் போலீசார் மாணவர் நந்தகுமார் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்தனர். தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை மாதேஷ் கொடுத்த புகார்படி போலீசார் வழக்கை மாற்றம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நந்தகுமார் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் ஆசிரியர்கள், இழப்பீடு வழங்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு வழங்கினால், வழக்கு எளிதாக முடிந்து விடும். ஆசிரியர்கள் இழப்பீடு வழங்குவது மட்டுமின்றி, வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. இதனால், மாதேஷ் கொடுத்த புகார்படி வழக்கு பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.