சிறுநீரகம் செயல் இழந்த சிறுவன்: மருத்துவ உதவி கேட்டு தாய் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுநீரகம் செயல் இழந்த சிறுவன்: மருத்துவ உதவி கேட்டு தாய் மனு

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: 'சிறுநீரகம் செயல் இழந்த மகனின் மருத்துவ செலவுக்கு, உதவி செய்ய வேண்டும்' என, அவரது தாய், சேலம் கலெக்டரிடம் மனு அளித்தார்.
சேலம், அசோக் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா. இவரது மகன் பாரத்குமார், 13. இருவரும், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். இதுகுறித்து, சசிகலா கூறியதாவது: மகன் பாரத்குமாருக்கு, பிறப்பில் இருந்தே ஒரு சிறுநீரகம் மட்டும் செயல்பாட்டில் இருந்தது. தற்போது, அதுவும் செயல்படாததால், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டியுள்ளது. இதற்கான செலவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது பாரத்குமார், மரவனேரி செயின்ட் பால்ஸ் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கிறான். நான், தறித்தொழில் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமே, குடும்ப ஆதாரமாக உள்ளதால், மருத்துவ செலவுக்கு திண்டாட வேண்டியுள்ளது. மருத்துவ சிகிச்சை, பராமரிப்புக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை