பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் பலி: சாலை மறியல்| Dinamalar

பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 சிறுவர்கள் பலி: சாலை மறியல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, பைக் மீது கார் மோதிய விபத்தில், இரண்டு சிறுவர்கள் இறந்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த தம்மணம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் தட்சிணாமூர்த்தி, 17, குமார், 17. இவர்கள், இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கின்றனர். நேற்று முன் தினம் மாலை, 4:00 மணிக்கு, விஷமங்கலம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதை பார்க்க, தட்சிணாமூர்த்தியும், குமாரும், யமகா பைக்கில் சென்றனர். அங்கு போட்டியை பார்த்து விட்டு, இரவு, 10:00 மணிக்கு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை தட்சிணாமூர்த்தி ஓட்டி வந்தார். திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு என்ற இடத்தில் வந்த போது, திருவண்ணாமலையில் இருந்து திருப்பத்தூர் நோக்கிச் சென்ற இண்டிகா கார், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தட்சிணாமூர்த்தி இறந்தார். படுகாயம் அடைந்த குமார், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், பேராம்பட்டு மெயின்ரோட்டில், இரவு, 11:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் வந்து, பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பேராம்பட்டு மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசார் ஏற்றுக் கொண்டனர். இதனால், ஒரு மணி நேரம் சாலை மறியல் செய்து விட்டு, நள்ளிரவு, 12:00 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர். திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.