ஆம்பூர் பா.ஜ., இளைஞரணி தலைவரை கத்தியால் வெட்டிய 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்பூர் பா.ஜ., இளைஞரணி தலைவரை கத்தியால் வெட்டிய 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்

Added : ஜூன் 20, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆம்பூர்: ஆம்பூர் நகர பா.ஜ., இளைஞரணி தலைவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பம், அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சங்கர், 35. இவர், ஆம்பூர் நகர பா.ஜ., இளைஞரணி தலைவராக உள்ளார். நேற்று காலை, 9:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள சாயிபாபா கோவிலுக்கு சங்கர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த சங்கர் கீழே விழுந்தார். அப்போது உருட்டுக் கட்டையால் அவரை அந்த கும்பல் தாக்கியது. இதை பார்த்த சங்கரின் ஆதரவாளர்கள் ஓடி வந்தனர். இதனால், நான்கு பேர் கும்பல், இரண்டு பைக்குகளில் தப்பியோடினர். அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு சங்கர் மாற்றப்பட்டார். ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, சங்கரை கத்தியால் வெட்டியவர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், சில பகுதிக்குள் விசாரணைக்கு சென்ற போலீசாரை, அப்பகுதியினர் உள்ளே விடாமல் திருப்பி அனுப்பினர். இதனால் ஆம்பூரில் பதற்றம் நிலவுவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை