முழுமையாக புரியும் வரை ஜி.எஸ்.டி., அமல்படுத்தக்கூடாது: விக்கிரமராஜா| Dinamalar

முழுமையாக புரியும் வரை ஜி.எஸ்.டி., அமல்படுத்தக்கூடாது: விக்கிரமராஜா

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

திருவண்ணாமலை: ''வணிகர்கள், அரசு அதிகாரிகள், முழுமையாக புரிந்து கொள்ளும் வரை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அமல்படுத்த கூடாது,'' என, வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜூலை, 1ல், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை அமல்படுத்தக் கூடாது; கால அவகாசம் வேண்டும் என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். அதேபோல், ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில், பல்வேறு சட்ட விதிகளில் குழப்பம் உள்ளது. வணிர்கர்களும், அதிகாரிகளும் முழுமையாக புரிந்து, தெரிந்து கொண்ட பிறகுதான் இதை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, வரிகளை வாங்கி கட்டக்கூடியவர்கள் வணிகர்கள். வணிகர்களை அழைத்து பேசாமல், சட்டங்களை இயற்றினால் ஏற்று கொள்ளமாட்டோம். அடித்தட்டு மக்கள் அன்றாடம் பயன்படத்த கூடிய பொருட்களுக்கு, வரி விதிப்பு இல்லாத நிலையை ஏற்படுத்த வேண்டும். ஜூன், 20ல் (இன்று), கர்நாடகா மாநிலம் பெங்களூருவில், நாட்டில் உள்ள அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்த கூட்டத்தில், வரிவிதிப்பில் மாற்றம் ஏற்படுத்தாவிட்டால், நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.