பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு| Dinamalar

பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement
இன்ஜினியரிங், படிப்பு, ரேண்டம் எண், சென்னை, தமிழகம், அண்ணா பல்கலை, கவுன்சிலிங்,  உயர் கல்வி துறை செயலர் சுனில் பாலிவல்,   மாணவர்கள்,  Engineering, Study, Random Number, Chennai, Tamil Nadu, Anna University, Counseling, Higher Education Secretary Sunil Poliwal, students,
Share this video :
பொறியியல் படிப்பு:ரேண்டம் எண் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது.
இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், இன்று(ஜூன் 20) வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் ரேண்டம் எண்ணை, உயர் கல்வி துறை செயலர் சுனில் பாலிவல் வெளியிட்டார்.
ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். அதை, அண்ணா பல்கலை இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201714:42:13 IST Report Abuse
மலரின் மகள் அப்படியே ரெண்டாம் முறையில் அட்மிசன் கொடுத்தால் என்ன? ரேண்டம் முறை சரிதானா?
Rate this:
Share this comment
Iyyappan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201717:52:01 IST Report Abuse
Iyyappanதவறு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.