லாலி பாடும் தமிழக அரசு - ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

லாலி பாடும் தமிழக அரசு - ஸ்டாலின்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (21)
Advertisement

சென்னை: மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு பா.ஜ.,வுக்கு லாலி பாடுகிற ஆட்சியாக செயல்படுகிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்றைய தமிழக சட்டசபையில் இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அரசின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிலைப்பாடு என்ன என சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்வர் அளித்த பதிலில்; இந்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் பின்னர் தான் இறுதி முடிவுகள் எடுக்கப்படும். மேலும் மக்களின் கோரிக்கையின்படி முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த பதிலில் திருப்தி அளிக்காததால் திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பா.ஜ.,காலில் விழும் தமிழக அரசு: ஸ்டாலின்

சபைக்கு வெளியே நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்; மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள தடைக்கு கோவா, புதுச்சேரியில் இறைச்சி தொடர்பான மத்திய அரசு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக. காங்., மற்றும் தோழமை கட்சியினர் குரல் எழுப்பினோம். முதல்வர் பதில் சரியாக சொல்லவில்லை. சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர அரசு ஏன் தயங்குகிறது ? பா.ஜ.,வுக்கு லாலி பாடுகிற, காலில் விழுந்து மாநில சுயாட்சிக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் ஆட்சி நடக்கிறது. பா.ஜ., காலில் விழுந்து பஜனை பாடுகிற அரசாக தமிழக அரசு விளங்குகிறது . மத்திய அரசின் ரெய்டுகளுக்கு அஞ்சி தமிழக அரசு செயல்படுகிறது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
20-ஜூன்-201716:59:29 IST Report Abuse
Balaji இன்னும் செயல் (?????) தலைவர் தனது அரசியல் அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக தெரியவில்லை....... இவ்வாறு சட்ட சபைக்கு சென்று 5 நிமிடத்தில் திரும்ப வருவதால் எதை சாதிக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை........ நல்லவேளை இன்னும் சட்டையை கிழித்துக்கொண்டு மீண்டுமொரு நாடகம் இதுவரை நடத்தவில்லை........
Rate this:
Share this comment
Cancel
PandiKala -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201716:44:56 IST Report Abuse
PandiKala இன்றைய புலம்பல் முடிந்தது.நாளை இதைவிட பெரிய அளவில் எதிர்பார்க்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
20-ஜூன்-201714:39:17 IST Report Abuse
Baskar எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டு ஆட்சியையும் கலைத்துவிட்டு மக்களுக்கு நீங்கள் லாலிபாப்ஸ்கொடுக்க முயற்ச்சி பண்ண வேண்டாம்.ஏற்கனவே நிறைய கொடுத்து விட்டிர்கள்.
Rate this:
Share this comment
Jayaraman Ravichandra - CHENNAI,பஹ்ரைன்
20-ஜூன்-201715:39:46 IST Report Abuse
Jayaraman Ravichandraநீ ஒரு ஆம்பிளையா இருந்த சோத்துல உப்பு போட்டு திங்குறவனா இருந்தா தளபதி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், இந்த தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது, பிரான்சிலேயே இருந்து விடு,சவாலா....
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201714:30:40 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் செல்லாது செல்லாது , நீங்களும் ரவுலும் மாட்டிறைச்சிக்கு பாடுபடுவதாக மக்களை ஏமாற்றுகிறீர்கள் ,
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
20-ஜூன்-201713:22:15 IST Report Abuse
s t rajan லாலி புனைந்து இசையமைத்துப் பாடிக் கொள்ளையடித்துச் செயலிழந்த தலைவரின் மகனின் இயலாமை ஒப்பாரி - என்ன இனிமை
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201714:04:30 IST Report Abuse
K.Sugavanamலாலி யார் பாடினாலும் இனிமைதான்......
Rate this:
Share this comment
Cancel
jambukalyan - Chennai,இந்தியா
20-ஜூன்-201712:41:41 IST Report Abuse
jambukalyan நீங்களும்தான் U P A ஆட்சியின் போது லாலி பாடினீர்கள் - அதையெல்லாம் இப்போது எடுத்து விட்டாலும் உலகமே நாறும்
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201714:06:07 IST Report Abuse
K.Sugavanamஇந்திய அரசியலே நாற்றமெடுத்து தான் கிடக்கிறது..இனி மேலும் நாற என்ன இருக்கிறது.....
Rate this:
Share this comment
Cancel
meenu - destiny,சிங்கப்பூர்
20-ஜூன்-201712:32:25 IST Report Abuse
meenu இதெல்லாம் சரி தான் அதற்காக ஆ வு நா சட்ட சபையை விட்டு வெளியேறாம உள்ளே இருந்து போராடலாமே...
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
20-ஜூன்-201712:31:17 IST Report Abuse
Rpalnivelu ஸ்டாலினுக்கு என்னதான் பிரச்சனை? சட்டசபையை உடனே கூட்டுங்கள் என்று கையில ஒரு பேப்பர் கட்டை வைத்துக் கொண்டு கதறுவது. சட்டசபையை கூட்டினால் சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்பது,
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201714:08:40 IST Report Abuse
K.Sugavanamதேசீய அரசியலுக்கு தயார் ஆகிவிட்டார் போல..சொல்லுவது ஒன்று,செய்வது மற்றொன்று என.அடுத்து வாயால நல்லா வடை சுட கத்துக்கிட்டா நல்லா வந்துடலாம்..முன் உதாரணம் தான் சமீபத்திலேயே இருக்கே.....
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-ஜூன்-201712:27:22 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM தினகரன் சும்மா பூச்சாண்டி காட்டாமல், தனது ஆதரவு 35 MLA களுடன் சேர்ந்து திமுக ஆட்சி அமைக்க ஆதரவு தரவேண்டும்... 35 MLA க்கள் சென்றால் நிச்சயம் இன்னும் ஒரு 15 MLA க்கள் வந்துவிடுவார்கள்.. MLA பதவி பறிபோகாது... ஆக திமுக கூட்டணி ஆட்சி அமையும்... ஒரு புறவாசல் ஆட்சி நமக்கு தேவையில்லை... தன்மானம் உள்ள தமிழன் ஆட்சி தான் தேவை... ஸ்டாலின் மற்றும் தினகரன் இருவருமே வீரம் நிறைந்த டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.. இப்போதைக்கு இவர்கள் சேருவது தான் ஒரே தீர்வு... அதிமுக, கட்சியை பிடிக்கலாம், என்று தினகரன் கனவு கொண்டு, இப்படியே குப்பைகொட்டிக்கொண்டு இருந்தால், பாஜக , தினகரனை ஒரு வழிபண்ணிவிட்டு, அதிமுகவையும் கைப்பற்றிவிடும்... தினகரன் இப்போதைக்கு திமுக - காங் கூட்டணியில் தஞ்சம் அடைவது தான் சிறந்த உத்தி....
Rate this:
Share this comment
Hm Join - Chennai,இந்தியா
20-ஜூன்-201713:40:48 IST Report Abuse
Hm Joinநடக்குற விஷயத்தை பேசவும்......
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஜூன்-201713:48:19 IST Report Abuse
Rafi கட்சி தாவல் தடை சட்டம் இருக்கின்றது. பல மன்ற உறுப்பினர்கள் ரெடியாக இருந்தும் திரு ஸ்டாலின் நாகரீகம் கருதி ஏற்க வில்லை போலும். அல்லது அந்த கட்சியை உடைத்து அவர்கள் மூலமாக தி மு க ஆட்சிக்கு வர விரும்பவில்லை. தற்போது அவர்களாகவே பலவீப்பட்டு அதன் மூலம் இந்த ஆட்சி களைந்து வரக்கூடிய தேர்தல் மூலமாகவே ஆட்சியை பிடிக்க திரு ஸ்டாலின் விரும்புகின்றார் என நம்புகின்றேன். தேர்தல் நேரத்தில் பலர் தி மு க விற்கு தாவ இருக்கின்றார்கள். அடுத்த தேர்தல் வரை தேர்தல் கமிஷன் கட்சி சின்னம் சம்மந்தமாக முடிவு எடுக்காது. பி ஜே பி நைசாக பன்னீரை கழட்டி விட்டாச்சு, உடைந்த கட்சிகளும் தங்களின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டி பி ஜே பியை அப்போதுதான் தைரியமாக கழட்ட துணிவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
DESANESAN -  ( Posted via: Dinamalar Android App )
20-ஜூன்-201712:24:26 IST Report Abuse
DESANESAN எக்ஸ்டரா பத்துகோடி தந்த தெம்பில் மூவரும் வெளிக்கு நடந்துள்ளனர். செரிக்குமா?
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
20-ஜூன்-201714:10:06 IST Report Abuse
K.Sugavanamயாரு குடுக்காக? extra பத்து கோடி?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை