உறவினர்களுக்கு சகாயம் செய்ய மறுத்த ராம்நாத்| Dinamalar

உறவினர்களுக்கு சகாயம் செய்ய மறுத்த ராம்நாத்

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (32)
Advertisement
உபி, கான்பூர், ஜனாதிபதி வேட்பாளர், ராம்நாத் கோவிந்த், கல்லூரி, 
UP, Kanpur, president candidate, Ramnath Govind, college

லக்னோ: பா.ஜ., தலைமையிலான தே.ஜ.க., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ராம்நாத் கோவிந்த், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்; தன் செல்வாக்கை பயன்படுத்தி உறவினர்களுக்கு சகாயம் செய்ய மறுத்தவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மூத்த சகோதரர் பேட்டி


குடும்பத்தினருக்கு சிபாரிசு செய்யாத ராம்நாத்

உ.பி., மாநிலம், கான்பூர் புறநகர் மாவட்டம் , ஜின்ஜாக் நகர் கிராமமும், அதன் அருகே உள்ள பரூக் கிராமும் ராம்நாத் கோவிந்தின் மூதாதையர் கிராமங்களாக கருதப்படுகிறது. இதில் ஜின்ஜாக் நகரில் தங்கி உள்ள அவரது, 76 வயது மூத்த சகோதரர் பயாரிலால் கூறியதாவது:
எனது சகோதரர் ராம்நாத் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என தகவல் கிடைத்ததும், அதை உறுதி செய்து கொள்ள அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால், அவரால் பேச முடியவில்லை. டில்லியில் பல்வேறு தலைவர்களுடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் தான் கிடைத்தது. ஜனாதிபதி வேட்பாளர் தகவல் கிடைத்ததும் எங்கள் சொந்த கிராமான பரூக்கில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கி விட்டனர். நான் ஜின்ஜாக் கிராமததில் ஒரு ஜவுளி கடை நடத்தி வருகிறேன்.
பள்ளி காலத்தில், ராம்நாத் நன்றாக படிப்பார். கல்லூரி படிப்புக்காக கான்பூர் நகரம் சென்றார். சிவில் சர்வீஸ் தேர்வுக்காக அவர் தயாராக டில்லியில் தங்கி இருந்தார். அப்போது தான் ஜன சங்க தலைவர் உஜ்ஜயின் ஹூக்கம் சந்த்துடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. அவர் இந்த அளவுக்கு உயர்வு பெறுவார் என நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
எங்கள் தந்தை கிராம தலைவராகவும், ஆயுர்வேத டாக்டராகவும் இருந்தவர். இத்துடன் கிராமத்தில் மளிகை கடை மற்றும் ஜவுளி கடை நடத்தி வந்தார். எங்களது நடுத்தர குடும்பம். சாதாரண வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தோம். நாங்கள் ஐந்து சகோதரர்கள்; மூன்று சகோதரிகளும் நன்றாக படித்தோம். ஒரு சகோதரர் ம.பி., மாநிலத்தில் கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். மற்றொரு சகோதரர் அரசு பள்ளி ஆசிரியராக உள்ளார். ராம்நாத் வழக்கறிஞராகி விட்டார். மற்ற சகோதரர்கள் தொழில் செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


குடும்ப உறுப்பினர்கள் 27 பேர்


ராம்நாத் உறவினர் தீப்கார் என்பவர் கூறியதாவது:ராம்நாத்துக்கு நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை, 27. அவர்களில் சிலர் நல்ல வேலை வாய்ப்பு வாங்கி தரும்படி ராம்நாத்திடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ' வாழ்க்கையில் நான் பெற்ற வெற்றிக்கு என் சொந்த முயற்சி தான் காரணம். எனவே நீங்களும் கடினமாக உழைத்து முன்னுக்கு வர வேண்டும்' என, கூறிவிடுவார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அப்பாவி - coimbatore,இந்தியா
20-ஜூன்-201719:02:54 IST Report Abuse
அப்பாவி ஆரம்பிச்சுட்டாங்கையா
Rate this:
Share this comment
Cancel
MUTHU - chennai,இந்தியா
20-ஜூன்-201717:21:39 IST Report Abuse
MUTHU இப்ப இந்த நியூஸ் தேவையா ? அவர் பதவிக்கு வந்ததும் பார்க்கலாம் மற்றும் அவர் பதவிக்கு வந்ததும் யாருக்கும் ஹெல்ப் செய்யாமல் இருக்கபோகிறார்.
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
20-ஜூன்-201717:40:32 IST Report Abuse
yaaroஅவர் ஏற்கனவே பதவியில் இருப்பவர் தான் .. ஒரு பெரிய மாநிலத்தில் கவர்னர் -ஆக. ஒரு எழவும் தெரியாமல் சொம்மாவே ஏதானும் பேத்திட்டு...
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201717:10:16 IST Report Abuse
Rajan. இது எல்லாம் துதி , எத்தனை கோடி செலவாகப்போகிறதோ , விவசாயி சாகிறான் , அவனுக்கு பணம் இல்லை , மன்னார் ஆட்சிக்கும் , இப்பொது இருக்கும் அரசமைப்புக்கும் வித்யாசம் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
20-ஜூன்-201717:00:21 IST Report Abuse
Solvathellam Unmai காவி கூட்டத்தின் அடுத்த தலைவன்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201716:54:31 IST Report Abuse
Endrum Indian என்னாது நம்ம மோடி குடும்பம் மாதிரியே இருக்குதே இதே நம்மூரிலே ஒருத்தன் அ.தி.மு.க கவுன்சிலர் ஆனா அவனுடைய ஒண்ணு விட்ட சித்தப்பாவின் மைத்துனரின் தம்பி பேரன் வரை என்ன என்ன ஆட்டம் காண்பிப்பதும், பணம் பண்ணுவதும்? இன்னும் இவர் அண்ணா குடும்பம் அதே நடுத்தரக்குடும்பமாக இருக்கின்றது. பேஷ் பேஷ்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:35:20 IST Report Abuse
Giridharan S நல்ல போர்த்தமப்பா தலைநகரில்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:34:46 IST Report Abuse
Giridharan S பிரதமர் போல ஜனாதிபதி வாழ்க ஜனநாயகம்
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
20-ஜூன்-201715:53:38 IST Report Abuse
Jaya Ram கலாமா அல்லது முலாமா என்பது போக போகத்தான் தெரியும், மேலும் நான் அறிந்தவரை இந்த நடுத்தர குடும்பத்தில் இருந்து வரும் தலைவர்கள் ஆனாலும் சரி , அரசு அதிகாரிகள் ஆனாலும் சரி தங்களுடைய நிலையினை எப்போதும் மாற்றிக்கொள்வதில்லை ஆனால் அதற்க்கு மாறாக உயர்குடும்பத்தில் இருந்து வருபவர்களும், மிகவும் எளிய குடும்பத்தில் இருந்து வருபவர்களும் கடும் விமர்சனத்திற்குள்ளாகிறார்கள் என்பதே உண்மை , உ-ம்- காந்தி, கலாம் ,காமராஜ், சாஸ்திரி ,அண்ணா, ஜோதிபாசு முதல் ரகம் , நேரு, இந்திரா, ராஜிவ் ,மோடி, கருணா, ஜெயா, பிரதிபா, மாயாவதி, லல்லு போன்றவர்கள் இரண்டாவதுரகம்,
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201714:29:49 IST Report Abuse
மலரின் மகள் மற்றொரு கலாம்?
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201714:11:55 IST Report Abuse
முக்கண் மைந்தன் கோவிந்து, வாழ்க.......
Rate this:
Share this comment
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201714:32:42 IST Report Abuse
Maverickசன் ஆப் த்ரீ......இந்த நக்கல் எல்லாம் எங்களுக்கும் தெரியும்......
Rate this:
Share this comment
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
20-ஜூன்-201715:15:53 IST Report Abuse
இடவை கண்ணன் சன் ஆப் த்ரீ....நல்லா இருக்கு......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை