பெண் கான்ஸ்டபிளை ஆணாக ஏற்றுக் கொண்ட சி.ஐ.எஸ்.எப்.,| Dinamalar

பெண் கான்ஸ்டபிளை ஆணாக ஏற்றுக் கொண்ட சி.ஐ.எஸ்.எப்.,

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பெண், ஆண், பீஹார், ஓரினச்சேர்க்கை, திருமணம், சிஐஎஸ்எப், மருத்துவ வாரியங்கள், பாலின மாற்று சிகிச்சை, புதுடில்லி,  மருத்துவ சிகிச்சை,கான்ஸ்டபிள், Female, Male, Bihar, Homosexuality, Marriage, CISF, Medical Boards, Gender Alternative Treatment, New Delhi,
Constable, Medical treatment,
Share this video :
பீஹாரை சேர்ந்த ஒரு பெண், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், 2008ம் ஆண்டு சேர்ந்தார்

புதுடில்லி: ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்ட பெண் கான்ஸ்டபிளை, ஒரு ஆணாக மத்திய தொழிலக பாதுகாப்பு படையான சி.ஐ.எஸ்.எப்., ஏற்றுக் கொண்டுள்ளது.
பீஹாரை சேர்ந்த பெண் ஒருவர் சி.ஐ.எஸ்.எப்., படையில், 2008 ம் ஆண்டு சேர்ந்தார். தன்னை ஒரு ஆண் என கருதிய அவர், உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் ஆண் வீரர்களுக்கு இணையான பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும், தன்னை ஆணாக மாற்றிக் கொள்ள பாலின மாற்ற மருத்துவ சிகிச்சையையும் மேற்கொண்டார். அவரின் கடின முயற்சிக்கு பிறகு சி.ஐ.எஸ்.எப்., தலைமை தற்போது அவரை ஒரு வீரர் என ஒப்புக் கொண்டுள்ளது.


மருத்துவ வாரியங்கள் ஒப்புதல்


வெளி உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்த விரும்பாத அந்த, 'வீரர்' கூறியதாவது:கடந்த பிப்.,மாதம் சி.ஐ.எஸ்.எப்., மத்திய ரிசர்வ் படையின் மருத்துவ வாரியங்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என்னை ஒரு ஆணாக ஏற்றுக் கொண்டனர். நான்கு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பிறகே இது நிகழ்ந்துள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை செய்துகொள்ள, 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளேன். தினமும் ஹார்மோன் ஊசிகள் போட்டுக் கொண்டது மிகவும் வலி மிகுந்ததாக அமைந்தது. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி இருந்திருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட நேர்ந்து இருக்காது.
இவ்வளவு நடந்த பிறகும் இந்த சமூகம் என்னை கேலி செய்யும். இருப்பினும், அதை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். என் பள்ளி நாட்கள் முதல் என்னை ஒரு ஆணாக தான் கருதி வந்தேன். மேலும், ஒரு ஆணை திருமணம் செய்ய நேரிடும் என்பதால், திருமணமே வேண்டாம் என கூறி விட்டேன்.
இந்த நேரத்தில் தான் சி.ஐ.எஸ்.எப்., படையில் எனக்கு பெண் கான்ஸ்டபிள் வேலை கிடைத்தது. அந்த நேரத்திலேயே சொந்த ஊருக்கு செல்ல கூடாது என முடிவு எடுத்து விட்டேன். ஊருக்கு சென்றால், திருமணத்திற்கு வற்புறுத்துவார்கள் என்பதால் தான் அந்த முடிவை எடுத்தேன். பணியிடத்தில் எனக்கு மற்ற பெண் கான்ஸ்டபிள்கள் செய்யும் வேலை தான் தரப்பட்டது. டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டேன்.


2013ல் திருமணம்


என் உயர் அதிகாரிகளிடம் என்னை ஒரு ஆணாக கருதும்படி கேட்டுக் கொண்டேன். அதே நேரத்தில் என்னுடன் பணியாற்றி மற்ற பெண்கள், என்னை ஒரு பெண்ணாக ஏற்க மறுத்து விட்டனர். 2012ல் எனக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது. சி.ஐ.எஸ்.எப்., படையில் பாலின மாற்றத்திற்காக விண்ணப்பித்தேன். 2013ல் என்னுடன் பணியாற்றும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். சக ஊழியர்கள் என்னை கேலி செய்தனர். என் பழைய பெயர் சொல்லி கூப்பிட்டனர். அவர்களை நான் புறக்கணித்து விட்டேன். தற்போது பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வளவு நடந்த பிறகும், எதிர்காலத்தில் அவருக்கு என்ன பணி கொடுப்பது என்பதில் சி.ஐ.எஸ்.எப்., தலைமைக்கு குழப்பம் ஏற்படும் என்றே கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201717:45:14 IST Report Abuse
Giridharan S எது எப்படியோ இரண்டு உயிர்கள் ஒன்றாகி உள்ளது. வாழ்த்துவோம்
Rate this:
Share this comment
Cancel
எமன் - எமபுரம்,அன்டார்டிகா
20-ஜூன்-201715:56:03 IST Report Abuse
எமன் ஓரினசேர்க்கை? அஹாஹாஹாஹா அப்போ ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும்? என்ன கன்றாவியான காட்சியா இருக்கும். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்பது தான் இயற்கையின் சிறப்பு. அதைவிட்டு ஓரினசேர்க்கை, மனிதனோடு விலங்கு சேர்க்கை என்னதான் நினைச்சுட்டு பண்ணறாங்க?
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
20-ஜூன்-201715:43:59 IST Report Abuse
Syed Syed ALL THE BEST .. GOD BLESS YOU ..
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201714:41:17 IST Report Abuse
மலரின் மகள் மனிதகுலம் இறைவனின் படைப்பை கேலி செய்ய கூடாது. ஆன் பெண் என்ற பாகுபாடு கூடாது. இட்டார் பெரியோர் என்று மட்டுமே இருக்கட்டுமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.