ஜனாதிபதி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்| Dinamalar

ஜனாதிபதி வேட்பாளருக்கு நேர்ந்த சோகம்

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சிம்லா, ஜனாதிபதி மாளிகை, ராம்நாத் கோவிந்த், புதுடில்லி, ஹிமாச்சல பிரதேசம்,  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பங்களா, கவர்னர் ஆச்சாரியா தேவ்விரத், Shimla, Presidential Palace, Ramnath Govind, New Delhi, Himachal Pradesh, President Pranab Mukherjee, Bungalow, Governor Acharya Devvirad,

புதுடில்லி: ராம்நாத் கோவிந்த், தற்போது தான் பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர். ஆனால், மூன்று வாரங்களுக்கு முன் சிம்லாவில் உள்ள ஜனாதிபதியின் கோடைகால மாளிகைக்குள் அவரை உள்ளே விட மறுத்த சம்பவம் நடந்துள்ளது.


கோடை கால பங்களா

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில், ஜனாதிபதியின் கோடை கால பங்களா உள்ளது. ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது இந்த பங்களாவிற்கு தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருவார். ஆனால், இந்த ஆண்டு அங்கு அவர் செல்லவில்லை.

ஜனாதிபதி வேட்பாளருக்கு அனுமதி மறுப்புதற்போது பீஹார் மாநில கவர்னராக உள்ள ராம்நாத் கோவிந்த், கடந்த மே மாதம் 28 ம் தேதி முதல், 30ம் தேதி வரை ஹிமாச்சல பிரதேச மாநில கவர்னர் ஆச்சாரியா தேவ்விரத் அழைப்பை ஏற்று அவரது விருந்தினராக, குடும்ப உறுப்பினர்களுடன் அந்த மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மே, 29ம் தேதி, சிம்லாவை ஒட்டி உள்ள காட்டுப்பகுதிக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார். அங்கிருந்து, 5 கி.மீ., தொலைவில் இருந்த ஜனாதிபதி மாளிகைக்கும் சென்றார். ஆனால, அங்கு இருந்த ஊழியர்கள் அவர்களை உள்ளே விட மறுத்து விட்டனர். டில்லி ராஷ்டிரபதி பவனில் இருந்து எந்த அனுமதியும் வரவில்லை என அவர்கள் கூறி விட்டனர். எனவே, ராம்நாத் கோவிந்தும் அவரது குடும்பத்தினரும் அங்கிருந்து சோகமாக திரும்பி சென்றனர்.


ஆலோசகர் சொன்னது என்ன

இது குறித்து ஹிமாச்சல பிரதேச கவர்னரின் ஆலோசகர் சசி காந்த் சர்மா கூறுகையில்,'' ராம்நாத் கோவிந்த் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த விரும்பவில்லை. எனினும் அவர் முன்கூட்டியே எங்களிடம் சொல்லி இருந்தால், அந்த மாளிகையில் தங்க ஏற்பாடு செய்து இருப்போம்,'' என்றார்.

எந்த மாளிகையில், ராம்நாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதோ, அந்த மாளிகையே இன்னும் சில நாட்களில் அவரது கட்டுப்பாட்டின் கீழ் வரப்போகிறது என்பது குறிப்பிடதக்கது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஜூன்-201715:21:57 IST Report Abuse
K.Sugavanam அதனால்தான் வேட்பாளரா அறிவிச்சாங்களா? ஓஹோ..இப்பதான் புரியுது..இப்பிடி எல்லாம் அவமானப்பட்டாரா?அப்போ அந்த பாதுகாப்பு அதிகாரிக்கு இருக்கு மண்டக படி,இவரு அங்க அரசு மரியாதையோடு போகும்போது.
Rate this:
Share this comment
Cancel
guru - chennai,இந்தியா
20-ஜூன்-201717:38:53 IST Report Abuse
guru ச்ச என்ன ஒரு சோகம் மனுஷன் எப்படி தாங்கினாரோ இப்படி ஒரு அவமானத்தை சகிச்சிக்கிட்டு.... அவர் குடும்பத்தினர் இவரை எப்படி எல்லாம் கலாய்த்திருப்பர் :(
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
20-ஜூன்-201717:03:29 IST Report Abuse
Rajan. இவரின் பழைய கதயை புரட்டவும் ,
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-ஜூன்-201716:47:39 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM மாளிகை மறுக்கப்பட்டவுடன் அய்யா எதனாச்சும் குடிசையில் தங்கினாரோ?.. அல்லது பஸ் புடிச்சு ஊருவந்து சேர்ந்தாரா?..இவரது சோக கதையை படிச்சவுடன் படா பீலிங்கா இருக்குப்பா...[ இவிங்களே தடுப்பாங்களாம்...அப்புறம் இவிங்களே உள்ளே போக வைப்பாங்களாம்.... நல்லா கீது ]
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-ஜூன்-201716:47:28 IST Report Abuse
Endrum Indian இதில் என்ன சோகம்??? அவர்கள் சொன்னது சரி தான் (ஆம்புலன்ஸுக்காக ஜனாதிபதி கான்வாயை நிறுத்திய போலீசுக்கு பரிசு, அப்படின்னா இவர்களுக்கும் கொடுக்கணுமே அத்தாட்சி இல்லாமல் அனுமதி இல்லை என்று சொன்னதற்காக????) , இவரும் (நம்மூரு கூமூட்டை அரசியல்வாதிகள் மாதிரி சண்டை போடாமல்) அமைதியாக வந்து விட்டாரே. மிக்க நல்லது.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201716:45:33 IST Report Abuse
மோகன் தமிழ்நாட்டில் உள்ள சிலருக்கு பிடித்ததோ இல்லையோ, பாஜகவை சேர்ந்த ஒருவர்தான் நமது அடுத்த ஜனாதிபதி. சுயபுத்தியுடன் செயல்படுபவர்.
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201716:33:04 IST Report Abuse
kmish அப்ப இவரும் நம்ப மோடி மாதிரி அடிக்கடி சுற்றுலா செல்பவர் அப்படின்னு சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:24:00 IST Report Abuse
Giridharan S ஜனாதிபதி ஆனபிறகு பாருங்க அப்புறம் என்ன வரவேற்பு அவருக்கு. இன்னும் ஜனாதிபதியே agala அதுக்குள்ள சோகமான நிகழ்வுன்னு இதை எப்படிங்க எடுத்துக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201715:54:12 IST Report Abuse
வாழ்க​ பாரதம் இந்தாலும் இன்னொரு பிரதீபா பாட்டிலாக இருக்கமாட்டார் என மக்கள் ப்ரார்திக்கவேண்டும். ஜனாதிபதியால் நாட்டிற்கு செலவேதான் தவிர ஒரு ரூபாய்க்கும் பிரயோஜனமாக வேலை செய்வதில்லை என்பதே நிதர்சனம்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran Ramasamy - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜூன்-201715:53:43 IST Report Abuse
Bhaskaran Ramasamy கடவுள் இருக்கான் குமாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை