எம்.எல்.ஏ.,க்களை வளைக்கும் எடப்பாடி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களை வளைக்கும் எடப்பாடி

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தினகரன், பழனிசாமி, எம்.எல்.ஏ., அமைச்சர்கள், சென்னை, முதல்வர் பழனிச்சாமி, அ.தி.மு.க., ஜெயலிதா,  தேர்தல், தி.மு.க., 
Dinakaran, Palanisamy, MLA, Ministers, Chennai, Chief Minister Palanisamy, ADMK, Jayalalitha, Election, DMK,

சென்னை: முதல்வராகி நூறு நாட்களை கடந்து விட்ட சூழ்நிலையில், பலவீனமான முதல்வர் போல தன்னை காட்டிக் கொண்டிருந்த முதல்வர் பழனிச்சாமி, திடீர் தெம்பு வந்தவராக, இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கும் நான் தான் முதல்வர். என் தலைமையிலான ஆட்சி சிறப்பான ஆட்சி என்று சொல்லும் அளவுக்கு பெயர் வாங்க விரும்புகிறேன். நீங்களும் அதே எண்ணத்தோடு, என்னோடு இணைந்து செயல்படுங்கள். அப்போதுதான், மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் என்று அமைச்சர்களிடம் அதிரடியாக பேசி வருவதாக தகவல் பரவி இருக்கிறது.இது குறித்து, கோட்டை வட்டாரங்கள் கூறியதாவது:முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக, தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்க்ளை தூண்டி விட்டு, அரசியல் செய்து வருகிறார் தினகரன். இதனால், தினகரன் மீது காட்டம் ஆகி உள்ள பழனிசாமி, தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் வேளையில், செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அடுத்தகட்டமாக, ஜெயலிதா பாணியில் அதிரடியாக அரசியல் செய்தால் மட்டுமே, அரசியல் எண்ணங்களுக்கு வழி தேட முடியும் என்று நினைக்கும் பழனிச்சாமி, எல்லா அமைச்சர் அலுவலகங்களிலும், தனது படத்தை மாட்ட வைத்தார். இது சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், இதில் இருந்து பின் வாங்க மாட்டேன் என, முதல்வர் அதிரடியாக சொல்லி விட்டார்.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அத்தனை பேரையும், அடிக்கடி சந்திக்கும் முதல்வர் பழனிச்சாமி, ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டால், இனி எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வராமல் போய் விடும். அதற்கு தினகரன் காரணமாக இருக்கக் கூடாது என்கிறார்.தேர்தல் நடந்தால், தி.மு.க., ஆட்சிக்கு வந்து விடும். அதற்கு எம்.எல்.,ஏ.,க்கள் தயாராக இருப்பரா? என கேள்வி எழுப்பி உள்ளார்.இதையடுத்தே, தினகரனை நோக்கிச் சென்ற அ.தி.மு.க., ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் பலரும், எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருக்கமாக உள்ளனர்.இவ்வாறு, கோட்டை வட்டாரங்கள் கூறின.பழனிச்சாமியை நாடும் தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,கள்

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nambikkai - Kent,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201723:14:48 IST Report Abuse
Nambikkai அடுத்து யாரும் வரப்போவது இல்லை அதனால் ஆடும் வரை ஆட்டம் போடுங்க .வேறு வழியும் இல்லை ஒட்டித்தான் ஆகணும்
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
20-ஜூன்-201722:05:27 IST Report Abuse
Vijay D.Ratnam வாழ்த்துக்கள் பழனிசாமி அவர்களே, முதல்வர் பதவியை கையில் வைத்துக்கொண்டு எதற்கு பயப்படவேண்டும். உண்மையில் மன்னார்குடி கூட்டத்தால் வளர்க்கப்பட்ட ஓபிஎஸ் ஒரு தொடைநடுங்கி, ராஜினாமா செய்யச்சொன்னதும் செய்துவிட்டு ஜெயலலிதா சமாதியில் போய் ஒப்பாரி வைத்தார். நீங்கள் பதவியை விட்டுத்தரவேண்டும் என்றதும் எனக்கு பதவி இல்லையென்றால் எவனுக்கும் கிடையாது என்னும் அந்த தைரியம் சூப்பர். மன்னார்குடி மாஃபியாவை அதிமுகவிலிருந்து விரட்டியடித்தால் நீங்கள்தான் பிறகு நம்பர் ஒன். தொடரட்டும் உங்கள் பணி.
Rate this:
Share this comment
Cancel
Narendran Mohan - Chennai,இந்தியா
20-ஜூன்-201719:10:53 IST Report Abuse
Narendran Mohan ஜெயலலிதா இறந்ததுக்கு அப்புறம் இப்பதான் எம் எல் ஏக்கள் குனிஞ்சு வளையாம இருக்கானுங்க. நீங்க ரொம்ப வளைச்சி உடஞ்சிர போறானுங்க.
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - சென்னை,இந்தியா
20-ஜூன்-201719:00:08 IST Report Abuse
தமிழன் ஒரே லம்பாக சசி கும்பலிடம் சம்பாதிப்பதை விட பல கோடிகளை அடுத்த மூன்று வருடத்தில் சம்பாதிக்கவே இவர்கள் விரும்புவர். மேலும், சசியிடம் கை நீட்டிப் பணம் வாங்கிக் காலில் விழுந்துவிட்டால், அவர்கள் கட்சியை வளைத்து விட்டு பவர் முழுவதும் கைக்கு வரும் போது மறுபடியும் இவர்களை அடிமை போல நடத்துவர். தினகரனுக்கு நாட்கள் செல்லச் செல்ல பவர் குறையும். உண்மையிலேயே ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டால் தனக்குப் பவர் இல்லை என்பது அவருக்கே தெரிந்து விடும். சசி வெளியே வரும் போது அனைத்து பிஸினஸ் தொடர்புகளை எடப்பாடி, அல்லது ஓபிஎஸ் வளைத்திருப்பர். அடுத்த தேர்தலில் திமுக வெல்லவே வாய்ப்பு அதிகம். ஜெ. அனுதாப அலை விரைவில் ஓய்ந்து விடும். ஓபிஎஸ், எடப்பாடி இணைந்தால் பிரதான எதிர்க்கட்சியாக ஆகலாம்.
Rate this:
Share this comment
Cancel
Vasanthakumar - Chennai,இந்தியா
20-ஜூன்-201718:35:10 IST Report Abuse
Vasanthakumar We need a new government that cares for Tamil Nadu people.
Rate this:
Share this comment
Cancel
guru - chennai,இந்தியா
20-ஜூன்-201717:30:30 IST Report Abuse
guru " எம்.எல்.ஏ.,க்கள் அத்தனை பேரையும், அடிக்கடி சந்திக்கும் முதல்வர் பழனிச்சாமி, ஆட்சி கவிழ்ப்பு வேலையில் ஈடுபட்டால், இனி எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சிக்கு வராமல் போய் விடும். " அதுக்கப்புறம் எப்படி சம்பாரிப்பிங்க என்று பயமுறுத்தி வருகிகிறார் ::::)
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201717:01:10 IST Report Abuse
kmish தமிழ் நாட்டு மக்கள் சொல்லிவச்சாப்புல ஒட்டு போடுவாங்க பார்த்து கோங்க, அப்புறம் இப்படி சிரிச்சுக்கிட்டு போஸ் எல்லாம் கொடுக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-ஜூன்-201716:40:39 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM குளத்தில் கிடப்பது வரை முதலைக்கு பலம் தான்... குளம் வற்றி முதலை , வெளிவந்தால் முதலைக்கு எந்த பலமும் இல்லை.... [ குளம் - பாஜக.....முதலை - உங்களுக்கு தெரியாததா ? ]
Rate this:
Share this comment
Cancel
Karunan - udumalpet,இந்தியா
20-ஜூன்-201716:33:05 IST Report Abuse
Karunan இவரது பலவீனம் அப்பட்டமாகவே வெளியே தெரிகிறது.சுருட்டுவதைக்காகவே இருக்கிறார்..சுத்தி சுத்தி போராட்டம் ..அடக்கமுடியாத போலீஸ் ..ஊழல் காரணமாக உள்ளே போவது உறுதி ..வருமானவரி துறை ரைடில் வசமாக சிக்கி இருக்கிறார் ..மோடியின் கையில் இவரது விதி ..குரங்குகை பூமாலை
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
20-ஜூன்-201716:25:02 IST Report Abuse
Syed Syed உண்மை , நீதி. நியாயம் . ஜெய்க்குறே காலம் போயிடுச்சி.
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
20-ஜூன்-201719:31:54 IST Report Abuse
vadiveluஅது 1967 ல் போனது, எப்போது வருமோ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை