ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் வெற்றி எளிதா?| Dinamalar

ஜனாதிபதி தேர்தல்: ராம்நாத் வெற்றி எளிதா?

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (17)
Advertisement
ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி தேர்தல், வெற்றி, புதுடில்லி,  பா.ஜ., எம்.எல்.ஏ., எம்.பி., தெலுங்கானா, ராஷ்ட்ரீய சமிதி, ஒடிசா, பிஜு ஜனதா தளம், நிதிஷ்குமார்,  Ramnath Govind, Presidential Election, Win, New Delhi, BJP,MLA, MP, Telangana, Rashtriya Samiti, Orissa, Biju Janata Dal, Nitish Kumar,

புதுடில்லி: தற்போதைய சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் எளிதாகவே வெற்றி பெறுவார் என்ற சூழ்நிலையே காணப்படுகிறது.


எம்.பி., ஓட்டு மதிப்பு என்ன

ஜனாதிபதி தேர்தலில், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் ஓட்டு போட வேண்டும். ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு, 708. ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு அவர் சார்ந்த மாநிலத்தின் மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடப்படும். எனவே, மாநிலத்திற்கு மாநிலம், எம்.எல்.ஏ.,வின் ஓட்டுப்பதிவு மாறுபடும். இந்த முறை, 776 எம்.பி.,க்கள், 4,120 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட உள்ளனர். இவர்களின் மொத்த ஓட்டு மதிப்பு, 10 லட்சத்து, 98 ஆயிரத்து, 882.


இதில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 5 லட்சத்து, 37 ஆயிரத்து, 683 ஓட்டுக்கள் உள்ளன. ஒட்டு மொத்த ஓட்டுக்களில் பாதியளவான, 5 லட்சத்து, 49 ஆயிரத்து, 442 ஓட்டுக்களை விட இது சற்று தான் குறைவு. அதே நேரத்தில், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியிடம், 3 லட்சத்து, 91 ஆயிரத்து, 739 ஓட்டுக்களே உள்ளன.பெருகும் ஆதரவு

பல மாநில கட்சிகள், ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியிடம், 82 எம்.எல்.ஏ.,க்கள், 11 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்த ஓட்டு மதிப்பில், இந்த கட்சியின் பங்களிப்பு, 2 சதவீதம். இந்த கட்சி ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியிடம், 117 எம்.எல்.ஏ.,க்கள், 20 எம்.பி.,க்கள் உள்ளனர். மொத்த ஓட்டு மதிப்பில், இந்த கட்சியின் பங்களிப்பு, 2.99 சதவீதம். இந்த கட்சியும் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆந்திரவை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியும் ராம்நாத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த கட்சியிடம், 10 எம்.பி.,க்கள், 66 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பில் இவர்களின் பங்களிப்பு, 1.53 சதவீதம்.


பீஹாரை ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.,வும் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. எனினும், ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ்குமார், ராம்நாத்திற்கு தான் ஆதரவு என்பதை மறைமுகமாக கூறி விட்டார்.

இந்த கட்சியிடம், இரண்டு எம்.பி.,க்களும், 71 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். மொத்த ஓட்டு மதிப்பில் இந்த கட்சியின் பங்களிப்பு, 1.91 சதவீதம். இந்த அளவுக்கு ஆதரவு பெருகி வருவதால், ராம்நாத் கோவிந்த் வெற்றி எளிமையான ஒன்று தான் என கூறப்படுகிறது.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem Kumar - Bangalore,இந்தியா
20-ஜூன்-201720:59:47 IST Report Abuse
Prem Kumar For not supporting BJP’s nominee Shri Ram Nath Kovind, the WB Chief Minister says although Shri Ramnath is a Dalit Leader, which is the main criteria for Indian opposition parties, but he was a BJP leader. It is cent percent correct that earlier he was a BJP leader but since last two years he was serving as Bihar Governor, the post which is nonpolitical . Secondly, when she is ready to accept the continuance of second term by Shri Pranab Mukherjee, who was not only Union Finance Minister but also a congress man for several years till the date he filed his nomination for President post . It is not unnatural and bad practice or bad precedent if a candidate nominated for President’s post by the ruling party if it enjoys support in parliament and several state assemblies. Hence, it is better if Mamtha choose any other valid reason within two days to oppose Shri Ramnath’s nomination. The above is applicable to all other opposition leaders who are in dilemma and going to meet with confused mind on 22nd to decide about fielding a candidate, knowingly that he/she would be defeated definitely.
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
20-ஜூன்-201718:26:21 IST Report Abuse
தேவி தாசன் பட்டை நாமம் போடாம இருந்தா சரி...
Rate this:
Share this comment
S V Sreenevasarangan - Doha ,கத்தார்
20-ஜூன்-201721:49:10 IST Report Abuse
S V SreenevasaranganDo not disrespect God's symbol used by a section of Hindu community like this in your commemts. Please see that your comments should not hurt others feelings and their faith in God....
Rate this:
Share this comment
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
20-ஜூன்-201717:35:09 IST Report Abuse
kundalakesi ஸமஸ்த கோவிந்த நாம சங்கீர்த்தனம், கோவிந்தா கோவிந்தா
Rate this:
Share this comment
Cancel
Mohan Nadar - Mumbai,இந்தியா
20-ஜூன்-201717:13:06 IST Report Abuse
Mohan Nadar நம்ம கையே வைத்தே நம்ம கண்ணை கூட்டும் தந்திரம் தெரிந்த கண்கட்டுவித்தைகாரர்கள் கையில் நாடு. மக்கள் பாவம் .சுயநினைவுக்கு வரும்போது இடுப்பில் இருக்கும் வேட்டியே காணாமல்போயிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
20-ஜூன்-201716:49:19 IST Report Abuse
kowsik Rishi கோவிந்த் வெற்றி எளிது அல்ல நிச்சயம் துணை குடியரசு தலைவர் பதவி தான் பேரம்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:44:10 IST Report Abuse
Giridharan S வெற்றி நிச்சயம் மோடி சத்தியம் கோவிந்தா வெல்வதே இவர்கள் லட்சியம்
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201716:43:27 IST Report Abuse
Giridharan S அவரை எப்படி வெற்றி பெற வைக்கறதுன்னு எங்களுக்கு தெரியமப்பா. என்ன மோடியார் அவர்களே
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
20-ஜூன்-201716:43:20 IST Report Abuse
தமிழர்நீதி பல கருத்துக்கள் , கொள்கைகள் , மதம்மொ ழி கொண்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் ஒருவருக்கு அதாவது ஒரு மதம் ஒரு மொழி வெறியருக்கு நாற்காலி கொடுத்து தான் தலையில் தானே மண்ணை அள்ளி போடும் முறைதான் ஜனாதிபதி தேர்தல் .
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
20-ஜூன்-201716:36:37 IST Report Abuse
chails ahamad மத்திய ஆளும் கட்சியினராகிய பா ஜவினால் நிறுத்தப்படும் வேட்பாளர் யாராக இருப்பினும் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றாலும் , தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுபவர் வரும் காலங்களில் மிகவும் கடிமான சந்தர்ப்பங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைமைகளை சந்திக்க வேண்டி இருக்கும் அதை தவிர்க்க இயலாது என்பதே உண்மையாக இருக்கும் . தற்போதைய ஆட்சியாளர்கள் பா ஜ கட்சியினர் மதவாத சிந்தனைகளுடன் , மக்களை பிரித்தாளும் அரசியலுடன் , தேவையற்ற சில அறிவிப்புகளை எந்தவித முன் யோசனைகளும் அற்று செயல்படுத்துவது மக்களை வேதனைப்பட செய்கின்றன என்பதை உணரும் நிலையில் பா ஜ வினர்கள் இல்லை என்பதே மனதை வேதனைக்கின்றது , எந்த ஒரு ஆட்சியாளர்களும் தனது குடி மக்கள் நிம்மதியாக வாழும் வழி முறைகளை அக்கறை கொண்டு செயல்படுத்துவதே நல்லாட்சி நடந்திடுவதை உறுதிபடுத்தும் , தற்போதைய ஆட்சியாளர்கள் ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு முதல் தற்போதைய ஆதார் கார்டு எண் வங்கியில் பதிவு செய்ய வேண்டியதுடன் , நில உடமையாளர்கள் பத்திர பதிவு அலுவலகத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகி கொண்டு இருப்பது மக்களை அழைகழிப்பதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தி கொண்டுள்ளது என்பதே உண்மையாகும் , மதசார்பற்ற இந்திய அரசுவின் இத்தனை காலமும் கட்டி காத்திட்ட மத ஒற்றுமைகளை இந்துத்வா என்ற பெயரில் மக்களை பிரித்தாள தேவையற்ற சில சட்ட சம்பிரதாயங்களை நிறைவேற்றிட குறுகிய எண்ண அடிப்படையில் சில சட்டங்களை நிறைவேற்றிட தனது ரப்பர் ஸ்டாம்பு ஜனாதிபதியாக திரு . ராம்நாத் கோவிந்த் அவர்களை பயன்படுத்திட முனைவார்கள் என்பதை எண்ணி பார்த்தால் இந்தியாவின் எதிர்காலம் சூனியமாகவே தெரிகின்றது, உண்மையும் அதுவேயாகவே இருக்கும் , இந்த நிலைகளை தவிர்த்திட சுய சிந்தனையில் செயல்படும் இந்தியாவின் நலனே பெரிது , குடி மக்களின் நிம்மதியே பெரிது என கருதும் தன்னலமற்ற சாதி மத பற்றற்ற ஒருவரை ஆளும் கட்சியினரும் , இதர கட்சியினரும் இணைந்து கலந்து ஆலோசித்து ஜனாதிபதி பதவிக்கு உரியவராக ஒருவரை முன்னிறுத்துவதே சிறப்புக்கு உரியதாக இருக்கும் , சிந்திப்பார்களா என்பதை காலங்கள் விடையளிக்க பொறுத்து இருப்போம் . வாழ்க பாரதம் .
Rate this:
Share this comment
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
20-ஜூன்-201718:01:15 IST Report Abuse
Enrum anbudanசாதி மத பிரிவினைகளை காங்கிரஸ் இலை மறை காய் மறையாக செய்து கொண்டிருந்தது. அதை பிஜேபி மிகவும் பகிரங்கமாக செய்ய நினைக்கின்றது ஆனால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் அது முடிய வில்லை அவ்வளவே. சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் என்று கூறிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கூட்டம் இந்தியாவில் கூடிவிட்டது. இந்தியாவில் எல்ல சுகத்தையும் அனுபவித்துக் கொண்டு அடுத்த நாட்டை ஆதரித்து கோஷமிடும் எட்டப்பர்கள் கூட்டமும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு உள்ளது. எல்லாமே நாட்டுக்கு நல்லதில்லை. பிஜேபி எது செய்தாலும் குத்தம் கண்டுபிடித்து பிரச்சினை செய்ய ஒரு கூட்டம் கிளம்பிவிட்டது. பெரும்பாலான என்ஜிஓ க்களின் வெளிநாட்டு வரவை பிஜேபி தடுத்து விட்டதின் வெளிப்பாடு தான் இதெல்லாம். என்ன பண்ணுவது, பாரதம் இதை எல்லாம் சமாளித்து தான் கடவுளின் அனுக்கிரகத்தோடு பீடு நடை போட்டுகொண்டு இருக்கின்றது. சகிப்புத்தன்மை பெரும்பான்மையினருக்கு மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை அது எல்லோருக்கும் அடிமனதில் இருந்து வரவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Raman Venkat - Chennai,இந்தியா
20-ஜூன்-201716:28:16 IST Report Abuse
Raman Venkat பிரதம மந்திரி தேர்தலே நமக்கு ஒரு பயனும் அளிக்காது. இந்த ரப்பர் ஸ்டாம்ப் தேர்தல் பத்திரிகை சம்பிரதாயம் மட்டுமே எங்களை போல் சாமானியர்களுக்கு ஒன்றும் பயனில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை