இடிக்கப்பட்டது சென்னை சில்க்ஸ் கட்டடம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இடிக்கப்பட்டது சென்னை சில்க்ஸ் கட்டடம்

Updated : ஜூன் 20, 2017 | Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: தீவிபத்தால் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
கடந்த மே 31 சென்னை திநகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இரண்டு நாட்கள் மேல் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதனால், கட்டடம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனை இடிக்க உத்தரவிடப்பட்டது. ஜா கட்டர் இயந்திரம் மூலம் கட்டடம் இடிக்கும் பணி நடந்து வந்தது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் இடிபாடு விழுந்து ஊழியர் ஒருவர் பலியானார். இதனால், கட்டடம் இடிக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் கட்டடம் இடிக்கும் பணி துவங்கி நடந்து வந்தது. இந்நிலையில், இன்று(ஜூன் 20) சென்னை சில்க்ஸ் கட்டடம் முற்றிலும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது.
இதில் ஒரு பகுதி அருகில் உள்ள பாலத்தின் மீது விழுந்தது. இதில் லேசான சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது. கட்டட இடிபாடுகள் அகற்றும் பணி நாளை முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் இடிப்புAdvertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
21-ஜூன்-201709:11:38 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இதில் ஒரு பகுதி அருகில் உள்ள பாலத்தின் மீது விழுந்தது. இதில் லேசான சேதம் ஏற்பட்டதாக தெரிகிறது.// லேசான சேதமாம். அடப்பாவிகளா, பாலத்தை ஐ.ஐ.டி சென்னை பொறியியல் துறையிடம் ஒப்படைத்து அதன் பலகீனத்தை கணிக்கவேண்டும். இப்போ பாலம் என்னிக்கி விழுமோன்னு பயந்து சாகணும்..
Rate this:
Share this comment
Cancel
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201723:05:05 IST Report Abuse
Bebeto Chennai சில்க் உரிமையாளருக்கு ஒரு அட்வைஸ் - இதுவரை மந்திரி, MLA ,போலீஸ், CMDA , கார்பொரேஷன் மெட்ரோ வாட்டர், மின்சார வாரியம், மற்றும் பல பேருக்கு, கொடுத்த லஞ்சம் பற்றிய குறிப்பு வைத்திருப்பீர்கள். அவர்களுக்கு கொடுத்த கோடி கணக்கான லஞ்சம் வேஸ்ட் - இனிமேல் அவர்கள் உங்களை கண்டுகொள்ள மாட்டார்கள். உங்களுக்கு பழைய நன்றியை காட்டி உதவ மாட்டார்கள். ஆகையால், தயவு செய்து, அந்த லிஸ்டை, மீடியா, போலீஸ், consumer கோர்ட் ஆகியோரிடம் கொடுத்து விடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201723:00:59 IST Report Abuse
அப்பாவி அப்பிடியே பாலத்தின் கீழே கடைபோட்டு ஆக்கிரமிப்பவர்களையும் அகற்றுங்கள்....மனுஷன் ஒரு அடி கூட ஃப்ரீயா நடக்க முடிவதில்லை... கேட்டா வாழ்வாதாரம் அது இதும்பாங்க..எதெல்லாம் வாழ்வாதாரம்னு ஒரு நியதியே கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
kumarkv - chennai,இந்தியா
20-ஜூன்-201720:57:06 IST Report Abuse
kumarkv முஸ்லீம் தீவீரவாதிகளால் எரிக்கப்பட்ட கட்டிடம்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஜூன்-201719:55:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அதுவா சாஞ்சு விழுது. பாலத்தின் சேதத்தையும் அந்த குரூப்பிடமே வசூலிக்க வேண்டும். இன்சூரன்ஸ் கம்பெனி உசார்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Nagarajan - chennai,இந்தியா
20-ஜூன்-201718:01:08 IST Report Abuse
Ramesh Nagarajan நான் டீ நகர்ல இருக்கேன். மே 31 லிருந்து இப்ப வரை எந்த வாகனமும் OVER BRIDGE வாயிலாக NORTH உஸ்மான் ரோடிலேருந்து SOUTH உஸ்மான் ரோடு முடிவில் இருக்கும் டீ.நகர் பஸ் STAND போக அனுமதி கிடையாது. இதனால் சர்வீஸ் LANE மற்றும் பனகல் பார்க் சுற்றிலும் வாகன நெரிசல் அதிகமாக இருக்கிறது. போலீசாரும் முடிந்தவரை TRAFFIC CONTROL செய்து வருகின்றனர், SOUTH USMAN ரோட்டில் பெரும்பாலான கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் NORTH USMAN ரோட்டில் இருக்கும் கடைகளுக்கு எல்லாம் நல்ல கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
20-ஜூன்-201717:22:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நேற்று பெய்த மழையில் விழுந்திருக்கும். அதற்கும் ஒரு தனி கணக்கு காட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
20-ஜூன்-201717:21:18 IST Report Abuse
Giridharan S எவளவு லாஸ் துல்லியமா கணக்கு பண்ணலியே. அதை வெளியே சொல்ல மாட்டாங்களா
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
20-ஜூன்-201716:52:40 IST Report Abuse
kmish அப்பாடா இப்பதான் நிம்மதி கணக்குல வராத பழைய ஸ்டாக் எல்லாம் காலி பண்ணியாச்சு , இனி gst வந்தாலும் கவலை இல்லை
Rate this:
Share this comment
Cancel
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
20-ஜூன்-201716:49:31 IST Report Abuse
JEYAM தமிழன் JEYAM யப்பா... இனி எல்லாரும் நிம்மதியா தூங்கலாம்...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
20-ஜூன்-201719:58:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்தி.நகர்லே மட்டும் இது மாதிரி 300 கட்டிடம் இருக்கு. சென்னையிலே ஆறாயிரக்கணக்கில். தமிழகமெங்கும் பல்லாயிரம். உங்க ஆயாம்மா தான் அரசாணைன்னு லஞ்சம் வாங்கி குவிச்சு கண்ட கருமாந்திரத்துக்கெல்லாம் பெர்மிட் கொடுத்து வச்சிருக்கே. எங்கே தூங்குறதாம்? நிம்மதியா தூங்கணுமுன்னா சமாதி கிட்டே தூங்கணும், இல்லை சமாதியிலே தூங்கணும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை