சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்த மாணவி கடத்தல்: காதலன் ஐகோர்ட்டில் மனு| Dinamalar

சாமியாரின் மர்ம உறுப்பை துண்டித்த மாணவி கடத்தல்: காதலன் ஐகோர்ட்டில் மனு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
சாமியார் மர்ம உறுப்பை துண்டித்த மாணவி, கடத்தல், காதலன், ஐகோர்ட்டில் மனு

திருவனந்தபுரம்: சட்டக்கல்லூரி மாணவியை சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக காதலன் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுவாமி கணேசானந்தா என்ற சாமியார், சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது சாமியாரின் மர்ம உறுப்பை மாணவி வெட்டினார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த மாணவியின் செயல் துணிச்சலானது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பாராட்டியிருந்தார். இதனிடையே, தான் சாமியார் என்பதால் தனது மர்ம உறுப்பு தனக்கு அவசியப்படாது என்பதால் தானே அதனை அறுத்துக் கொண்டதாக சாமியார் வாக்குமூலம் அளித்திருந்தார்.


மாணவி சர்ச்சை:


இந்த வழக்கில் சாமியாரின் உறுப்பை நான் வெட்டவில்லை, காவல் துறையினரே அவ்வாறு கதை கட்டி விட்டனர் என கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குள்ளான மாணவி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சட்டக்கல்லூரி மாணவியை சாமியாரின் ஆட்கள் கடத்தி வைத்துள்ளதாக, அவரின் காதலன் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மாணவியின் ஆண் நண்பர் ஐயப்பதாஸ் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூன்-201701:28:17 IST Report Abuse
அப்பாவி சாமியார்கள் மீது கண்காணிப்பு அதிகமாக்கப் படவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
21-ஜூன்-201700:38:05 IST Report Abuse
Rafi சாமியார்களின் அராஜகம் நம் நாட்டில் வரம்பு மீறி கொண்டிருக்கு, அவர்களுக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்து கொண்டிருக்கின்றது, சாமியார்கள் என்றால் அவர்கள் மீது மரியாதை வர வேண்டும், முற்றும் துறந்தவர்கள் என்ற போர்வையில் அவர்கள் வாழும் ராஜபோக வாழ்க்கையின் ரகசியங்களை விசாரிக்க வேண்டும். இப்போது அதையே பயன் படுத்தி தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சாமியார்களின் தரம் இப்போதெல்லாம் கோடியிலே புரண்டு கொண்டிருக்கின்றார்கள் அரசு செலவில் பாதுகாப்பு பந்தா வேறு துணைக்கு.
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
20-ஜூன்-201721:31:04 IST Report Abuse
ramasamy naicken ஆறு இன்ச் மர்ம உறுப்பில் இவ்வளவு மர்மமா?
Rate this:
Share this comment
Cancel
D.MANIKANDAN - pollachi,COIMBATORE.,இந்தியா
20-ஜூன்-201721:01:50 IST Report Abuse
D.MANIKANDAN கேரளா-இதிலேயும் ஒரு முன்னுதாரணம்.ஆமா,எல்லா கேரளா மக்களும் தன சொந்த மாநிலத்தை விட்டுட்டு வரவே ஆசைப்படுகிறார்கள். அது ஏன்? தன மாநிலத்தை விட்டு மக்கள் ஏன் வெளிமாநிலம் செல்கிறார்கள் என கேரளா முதலைச்சர் என்றாவது சிந்தித்திருப்பாரா?
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
20-ஜூன்-201719:56:51 IST Report Abuse
Nalam Virumbi துண்டிக்கப் பட்டது மர்ம உறுப்பு. அந்த மாணவி இருக்குமிடம் மர்மம். எல்லாம் மர்ம மயம்
Rate this:
Share this comment
Cancel
Raman - Lemuria,இந்தியா
20-ஜூன்-201719:47:06 IST Report Abuse
Raman அந்த உறுப்பில் எந்த மருமமும் இல்லை . வேறு ஏதேனும் பெயர் பயன்படுத்தினால் நல்லது
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-ஜூன்-201719:26:51 IST Report Abuse
Pasupathi Subbian இதில் அனைத்தும் முன்னுக்குப்பின் முரணாக , மர்மமாகவே உள்ளது. அந்த பெண்ணுக்கும் அவர் குடும்பத்துக்கும் மிக நம்பிக்கையானவராக இந்த சாமியார் இருந்துள்ளார். அந்த பெண்ணின் முன்னேற்றத்துக்கு அவர் உதவியுள்ளார், அவர் தன்னுடன் உறவு கொண்டதில்லை என்று அந்த பெண் கூறுகிறார். அப்படி என்றால் ஆணுறுப்பு அவரின் கையில் எப்படி வந்தது, அவரின் ஆடையில் ஆண் விந்துகள் சிதறி உள்ளனவே அது எவ்வாறு? அந்த சாமியாருடன் அந்த பெண் நெருங்கி பழகுவதை அந்த குடும்பத்தார் தடை செய்யவில்லையே ஏன். தனியாக இருக்கும் சாமியாரை இரவு வேளையில் இந்த பெண் சென்று சந்திக்கும் பழக்கம் இருந்திருக்கிறதே. இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவருவது காவல்துறையின் செயல்.
Rate this:
Share this comment
Dol Tappi Maa - NRI,இந்தியா
21-ஜூன்-201702:27:05 IST Report Abuse
Dol Tappi Maaசாமியாருங்க எப்போ சிறைக்கு சென்றார்கள் பணம் கொடுத்து வழக்கை வலுவிழக்க செய்து விடுவார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.