UP government makes it compulsory for patients, kin to have Aadhaar card to get ambulance | ஆம்புலன்ஸ் வரணுமா : ஆதார் எண்ணை காட்டு : உ.பி.யில் தான் இந்த கூத்து| Dinamalar

ஆம்புலன்ஸ் வரணுமா : ஆதார் எண்ணை காட்டு : உ.பி.யில் தான் இந்த கூத்து

Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஆம்புலன்ஸ், ஆதார், உத்தரபிரதேசம், காஸ், வங்கி கணக்கு, எரிபொருள், டிரைவர்

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அம்மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களில் வரும் நோயாளிகள் அல்லது உறவினர்கள் ஆதார் எண்ணை கட்டாயமாக சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிகழ்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஸ் மானியத்திற்கு ஆதார் கட்டாயம், வங்கி கணக்கு துவங்க ஆதார் என்று ஆதார் எண் கட்டாயம் என்ற நிகழ்வு நாளொருவீதம் அதிகரி்த்து வரும் நிலையில், அது தற்போது அரசு மருத்துவமனை ஆம்புலன்சை பயன்படுத்த ஆதார் கட்டாயம் என்ற அளவிற்கு வந்துள்ளது.

ஏன் ஆதார் கட்டாயம் : ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உண்மைக்கு புறம்பாக போன் அழைப்புகளை வரச்செய்து, பணிநேரம், எரிபொருள் செலவு குறித்து பொய்பான தகவல்களை அளித்து பெரும்முறைகேடு செய்கின்றனர். இம்முறைகேட்டை தவிர்க்கவே, நோயாளிகள் அல்லது அவர்களின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்த ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் சேவைக்கு ஆதார் அவசியம்

ஆதார் விபரங்கள் அளிக்கப்படாவிட்டாலும், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துசெல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆதார் கட்டாயம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

அதிர்ச்சி: தங்கள் கிராம மக்களுக்கு இன்னும் ஆதார் அட்டைகள் வழங்கப்படாதநிலையில், ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டிற்கு ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பு தங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக புரான்பூர் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
21-ஜூன்-201706:54:47 IST Report Abuse
அம்பி ஐயர் இதற்கு காரணம் திருட்டுத் தனம் செய்யும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தான்... அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201722:58:47 IST Report Abuse
Bebeto என்னய்யா இப்படி ஒன்றும் தெரியாமல் உளறுகிறீர்கள். நீங்கள் பல I D கார்டுகளை வைத்திருப்பீர். - பாஸ்போர்ட், வோட்டர் ID , ரேஷன், பேங்க் ID வேலை செய்யும் இடத்தின் ID என பல கார்டு இருக்கும். இதில் இருப்பவை - உங்கள் பெயர், வயது, வேலை, குடும்பம், விலாசம் ஆகியவைதான். நமது அரசு ஊழியர்களுக்கு காசு கொடுத்தால், இன்னும் பத்து ID கார்டு வாங்கி வைத்து கொள்ளலாம். இதில் எதிலும், உங்கள் கைரேகையோ, கண் விழி படமோ கிடையாது. யார் வேண்டுமானாலும் உங்கள் கார்டை எடுத்து, போட்டோவை மாற்றி, தன போட்டோவை ஒட்டி ஊரை ஏமாற்றலாம். இது நடந்து கொண்டிருக்கிறது,. பாகிஸ்தானியர்கள், சீனர்கள், இலங்கை தீவிரவாதிகள், பங்களாதேஷ் வாசிகள் மற்றும், இந்திய திருட்டு பேர்வழிகள், ஆகியோர், சர்வ சாதாரணமாக இதை செய்து, நாட்டை கொள்ளை அடித்து, அந்நிய நாட்டிற்கு உதவுகிறார்கள். ஆதார் கார்டு ஒன்றில்தான் -கைரேகை, கண் விழி படம் உள்ளது. இவற்றை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது,. டூப்ளிகேட் செய்ய முடியாது. இதுதான் நம் ஒரே ID கார்டு. மற்ற ID எல்லாம் குப்பைகள். இனியாவது இவற்றை உணர்ந்து, எதிர் கட்சிகளின் மூளை சலவைக்கு பலி ஆகாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
20-ஜூன்-201722:49:42 IST Report Abuse
அப்பாவி ஏன் வழக்கமான பாணியில் யார் ஆட்சி நடை பெறுகிறது என்கிற தகவல் இல்லை?
Rate this:
Share this comment
Cancel
ranaraja - Kl,மலேஷியா
20-ஜூன்-201721:35:51 IST Report Abuse
ranaraja Adapavigga ,pavaam U.P makkal..
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
20-ஜூன்-201721:01:44 IST Report Abuse
sundaram போன வாரம் ஆஸ்பத்திரியில மரணமடைந்த ஒரு குழந்தை சடலத்தை வீட்டுக்கு எடுத்துக்கிட்டு போக ஆம்புலன்ஸ் தராம அந்த பச்சை புள்ளை சடலத்தை சைக்கிள் ல கொண்டு போக வச்ச காரணம் இப்போதான் தெரியுது.
Rate this:
Share this comment
21-ஜூன்-201705:43:02 IST Report Abuse
அப்பாவிஆதார் இருந்தா அந்த ப்ரச்சனை வந்திருக்காதுல்ல......
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
20-ஜூன்-201721:00:16 IST Report Abuse
sundaram ஏனுங்க இந்த செய்திக்கு உங்க தர்மப்படி யோகி ஆதித்யநாத் அதிரடின்னு தலைப்பு கொடுத்திருக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ibrahim - Chennai ,இந்தியா
20-ஜூன்-201720:50:17 IST Report Abuse
Mohamed Ibrahim அனைவரும் உடேனே ஆதார் அட்டை எடுத்துடுங்கோவ்... அறை குடங்கள் ஆட்சி செய்த்தால் இப்படித்தான் நாடு கூத்தாடும்...
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
20-ஜூன்-201720:17:19 IST Report Abuse
Kuppuswamykesavan உ.பி-யில், ஒரு சில ஆம்புலன்ஸ் டிரைவர்களின் ஃபிராடு செயலால், எப்படி பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது என்று பாருங்கள் வாசகர்களே.
Rate this:
Share this comment
நண்பா - kudamook,இந்தியா
20-ஜூன்-201723:20:27 IST Report Abuse
 நண்பாஉங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நீங்கள் செய்யும் சேவையை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும். ஏன் , தப்பு செய்கிறவன் தண்டனை வேறொருவருக்கா? எல்லோரும் கையில் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு செல்கிறார்களா?பேசாம ஆதார் நம்பரை இந்தியாவின் குடிமக்கள் அனைவரும் நெத்தியில பச்சை குத்திக்கணும்னு சட்டம் போட்ட்ருங்க ? :( :(...
Rate this:
Share this comment
Cancel
தலைவா - chennai,இந்தியா
20-ஜூன்-201719:58:22 IST Report Abuse
தலைவா உத்தர பிரதேசத்தில் இது என்ன கூத்து என்று செய்தி வெளியிட்டது தவறு அவதார புருஷன் ஆட்சி செய்யும் தேசத்தில் முறைகேடுகளை தடுக்க செய்ய படும் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்...கேலியெல்லாம் பண்ணப்படாது....
Rate this:
Share this comment
indian - ,
20-ஜூன்-201720:37:58 IST Report Abuse
indiankalaychittaraam. kandupudichittaramnu mokka podaatheer....
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
21-ஜூன்-201711:25:19 IST Report Abuse
தலைவா மொக்கபோடுவது நானா? இல்லை யோகியா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை