இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ளே திடீர் ராஜினாமா| Dinamalar

இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ளே திடீர் ராஜினாமா

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 இந்திய அணி, பயிற்சியாளர், கும்ளே, திடீர், ராஜினாமா
Share this video :
இந்திய அணி பயிற்சியாளர் கும்ளே ராஜினாமா

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே திடீரென விலகினார். இதற்கு கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலே காரணம் என கூறப்படுகிறது.

இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் கும்ளே, 46. இவரது ஒரு ஆண்டு பதவிக்காலம் (17 போட்டியில், 12ல் வெற்றி) நேற்றுடன் முடிகிறது. இருப்பினும், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை, இவர் பதவியில் தொடர்வார் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்தது.

இதற்கு கேப்டன் கோஹ்லி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வௌியாகின. இவர்களுக்கு இடையிலான உறவு மோசமான நிலைக்கு சென்று விட்டதால், சமரசம் செய்து வைக்க முயன்ற, சச்சின், கங்குலி, லட்சுமண் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், கும்ளே இந்திய அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் செல்ல மாட்டார் என செய்திகள் தெரிவித்தன.

இதனிடையே, ஐந்து ஒருநாள், ஒரு 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, நேற்று வெஸ்ட் இண்டீஸ் கிளம்பிச் சென்றது. முதல் போட்டி வரும் 23 ம் தேதி, போர்ட் ஆப் ஸ்பெயினில் நடக்கவுள்ளது.

கடைசியில் எதிர்பார்த்தபடியே பயிற்சியாளர் கும்ளே, இந்திய வீரர்களுடன் செல்லவில்லை. இவர் தலைவராக உள்ள ஐ.சி.சி., கிரிக்கெட் கமிட்டி குழு கூட்டம் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்கும் கும்ளே, 23ம் தேதி நடக்கும் வருடாந்திர கூட்டத்திலும் பங்கேற்க, லண்டனில் தங்கியிருப்பதாக கூறப்பட்டது.


திடீர் முடிவு:இதனிடையே, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை கும்ளே திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பி.சி.சி.ஐ.,க்கு அனுப்பியதாக தெரிகிறது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஜூன்-201708:40:43 IST Report Abuse
K.Sugavanam மானமுள்ள எவரும் இந்த BCCI அணிக்கு பயிற்சியாளரா வரமாட்டார்... அவ்வளவு மோசமான அணி.
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
21-ஜூன்-201705:54:04 IST Report Abuse
Gopalakrishnan Mr. Kumble is a gentleman, while Viraat is an arrogant.
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
21-ஜூன்-201705:49:55 IST Report Abuse
sankar மானஸ்தன்
Rate this:
Share this comment
Cancel
தேவி தாசன் - chennai,இந்தியா
21-ஜூன்-201703:30:50 IST Report Abuse
தேவி தாசன் கோஹ்லி தான் ரிசைன் பன்னனும். திமிர் பிடித்த கேப்டன். இவரை பதவியில் இருந்து தூக்கி எறியனும்
Rate this:
Share this comment
Cancel
rishi - varanasi,இந்தியா
21-ஜூன்-201700:30:26 IST Report Abuse
rishi கோழி தான் இப்போ ராஜினாமா பண்ணவேண்டும் திமிர் பிடித்த ஒரு கேப்டன் நமக்கு தேவையில்ல நிதானமா சிந்திக்கிற கேப்டன் டோனி தான் நமக்கு வேணும் call டோனி back டு கேப்டனேசி.
Rate this:
Share this comment
Cancel
Nambikkai - Kent,யுனைடெட் கிங்டம்
20-ஜூன்-201723:09:25 IST Report Abuse
Nambikkai போனால் போகட்டும் போடா என்று அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel
Kalangala Subbudu - Chennai,இந்தியா
20-ஜூன்-201721:44:06 IST Report Abuse
Kalangala Subbudu Success has gone to Kohli's head.
Rate this:
Share this comment
Cancel
J.guru - Ariyalut,இந்தியா
20-ஜூன்-201721:43:48 IST Report Abuse
J.guru Super
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
20-ஜூன்-201721:19:55 IST Report Abuse
Ramesh Kumar நியாயமாக பார்த்தால் கும்ப்ளேவை அவமதித்த கோஹ்லி தான் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
20-ஜூன்-201720:58:06 IST Report Abuse
s t rajan மிகவும் வெற்றிகரமாயிருந்த வீரர்கள் பயிற்சியாளராய் இருந்தால் EGO CLASHES வரத்தானே செய்யும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.