Justice karnanan Arrested in Kovai | தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது | Dinamalar

தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் கைது

Updated : ஜூன் 21, 2017 | Added : ஜூன் 20, 2017 | கருத்துகள் (46)
Advertisement

கோவை: கோர்ட் அவமதிப்பு வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்ய மேற்குவங்க போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதன் பேரில் ஓரு மாதமாக தேடப்பட்டு வந்த நீதிபதி கர்ணன் இன்று கோவையில் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த, கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினார். இதனால், அவர் கோல்கட்டா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு, ஊழல் பட்டியலை அனுப்பி வைத்தார். இதனால், கர்ணன் மீது, உச்ச நீதிமன்றம், அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், அவருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 12-ம் தேதி கர்ணன் ஒய்வு பெற்றார்.

தலைமறைவாக இருந்த நீதிபதி கர்ணன் கைது

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் கர்ணனை கைது செய்ய மேற்கு வங்க போலீசாருக்கு உத்தரவிட்டது. கர்ணன் தலைமறைவானார். இதையடுத்து கர்ணனை கைது செய்ய, மேற்கு வங்க டி.ஜி.பி., மற்றும் கூடுதல், டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், சென்னை உள்ளிட்டபல்வேறு ஊர்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி செல்லும் சாலை ஈச்சனாரி அருகே மாச்சநாயகன் பாளையில் உள்ள உறவினர் வீட்டில் கர்ணன் தங்கியிருப்பதாக ரகசியதகவல் கிடைத்தது. அவரது செல்போன் சிக்னலை வைத்து, கோவை மாநகர போலீசார் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று கர்ணனை மேற்குவங்க போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த கர்ணன் கைது செய்யப்பட்டார்.


போலீசாருடன் வாக்குவாதம்

மேற்கு வங்க போலீசாருடன் முன்னாள் நீதிபதி கர்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோவையிலிருந்து போலீசாருடன் செல்ல மறுப்பு தெரிவித்தார்.


மேற்குவங்க ஏடிஜிபி ராஜேஸ்குமார் பேட்டி

இன்று(ஜூன்-20) இரவு 11 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார் கர்ணன். இதனை தொடர்ந்து நாளை(ஜூன்-21) கோல்கட்டா அழைத்து செல்லப்படுவார் என மேற்கு வங்க ஏடிஜிபி ராஜேஸ்குமார் தெரிவித்தார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aswini kumar - chennai,இந்தியா
21-ஜூன்-201710:33:33 IST Report Abuse
Aswini kumar அவரை கைது செய்து விட்டால் அவர் சொன்னது பொய் என்று ஆகி விடாது...அவர் உண்மையை தான் கூறி இருக்க வேண்டும்.. நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்று 130 கோடி மக்களுக்கும் தெரியும்... அதற்கு சாட்சியாக எத்தனையோ வழக்குகளில் வந்த விசித்திரமான தீர்ப்புகள்...
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
21-ஜூன்-201710:09:47 IST Report Abuse
நக்கீரன் இந்த கர்ணன் தப்பானவரோ இல்லையோ, ஆனால் அவரே சட்டத்தை மதிக்கவில்லை என்பது நீதியும் நீதிமன்றங்களும் நம் நாட்டில் எப்படி உள்ளது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. அவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதே லஞ்ச, ஊழல் புகார்களை சுமத்தியுள்ளார். அந்த நீதிபதிகள் யாரும் இதை இதுவரை மறுக்கவில்லை. தங்கள் மீது குற்றம் சுமத்தி விட்டான் என்பதற்காக மட்டும் அவன் குரல்வளையை நெறிக்க முயற்சிப்பது சமீபகாலமாக அரசுகள் மட்டுமல்ல, நீதிமன்றங்களும் செய்ய ஆரம்பித்து விட்டன. "எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றான் எங்கள் அய்யன் வள்ளுவன். அதற்கேற்ப ஒட்டு மொத்த நீதி துறையையும் அதன் செயல்பாடுகளையும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதிபதிகள் ஒன்றும் கடவுள்கள் அல்ல. ஆனால், இன்று அவர்கள் அப்படிதான் தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். சட்டமும் நீதியும், பணமும், அதிகாரமும் இருப்பவனுக்கு சாமரம் வீசுகின்றன. அதுவே நிதர்சனமான உண்மை. ஆனால், நீதி கடைநிலை மனிதனுக்கும் சென்று சேர வேண்டும். சட்டம் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். நீதி பிறழ்ந்து கொண்டே இருக்குமானால், அரசுகள் அதை தொடர்ந்து வேடிக்கை பார்க்குமானால், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மக்களே சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இது நிச்சயம் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
21-ஜூன்-201709:21:44 IST Report Abuse
Narayanan Sklaxmi ஒரு Z பிரிவு உள்ளஒருவரையே வீட்டிலிருந்து கோட்டைவிட்ட போலிஸிற்கு பாராட்டுக்கள் ஒருமாதம் பின்பு கைதுசெய்தால் அவார்ட் வழங்கலாம். அவரும் ஜாமினில் வெளியேவந்து உலாவருவார் அவர்மீது உள்ள குற்றம்/வழக்கு எல்லோருக்கும் மறந்துவிடும். வாழ்க பாரதம் இந்த போலீஸ் மற்றும் இன்டெலிஜெண்ட் பிரிவுதான் நம் மக்களை காப்பாற்றும் என்று நம் போன்ற மக்கள் நம்பவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
A shanmugam - VELLORE,இந்தியா
21-ஜூன்-201709:12:22 IST Report Abuse
A shanmugam ஹை கோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்வது இந்திய நீதி துறைக்கே ஒரு "கரும் புள்ளி" என சொல்லலாம். இந்தியாவில் நீதிபதியாவது மாபெரும் புண்ணியம் பண்ணி இருக்கவேண்டும். துன்பம் படும் மக்கள் தங்கள் துயரங்களை நீதிபதிகளிடம் "நீதி" கேட்பார்கள். அந்த நீதிபதியே கைது செய்து சிறையில் அடைத்தால் துன்பம் பெரும் மக்கள் தங்கள் குறைகளை யாரிடம் முறையிடுவார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
21-ஜூன்-201708:55:00 IST Report Abuse
Ramaswamy Sundaram ஹூம்...இவர் ஒரு தமிழர் அதிலும் தலித்து...தமிழ் மக்களை தலித் ஜனங்களையும் அசிங்கப்படுத்த இவர் வேறு...ஏற்கனவே ஆண்டிமுத்து ராசா என்கிற ஒரு திகார் ஜெயிலுக்கு போன திருடன் முதல் அவமானம். இந்த மேன்மை தங்கிய முன்னாள் நீதி அரசர் இரண்டாவது அவமானம்...தலைமறைவு என்பது கால காலத்துக்கும் நிக்கப்போகும் அசிங்கம்...
Rate this:
Share this comment
Cancel
Shree Ramachandran - chennai,இந்தியா
21-ஜூன்-201708:34:09 IST Report Abuse
Shree Ramachandran மஹாபாரத கர்ணன் ஒரு கொடையாளி. இவரோ அந்த பெயரை ...யில் போடுகிறார். இவருக்கு ஓய்வூதியம் கொடுக்கக்கூடாது. ஒய்வு ஊதியம் சேவை காலத்தில் உள்ள நன்னடத்தைக்கும் பின்னர் அமைதியான வாழ்வு நடத்தவும். இவர் ஆறு மாத காலம் சிறை சென்றும் ஒய்வு ஊதியம் பெற்றால் அது அரசின் கையால் ஆகாதனத்தை காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-ஜூன்-201708:18:09 IST Report Abuse
K.Sugavanam மலையை கெல்லி எலியை பிடித்துவிட்டார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஜூன்-201708:17:38 IST Report Abuse
Nallavan Nallavan குற்றமற்றவர் என்றாலும் கூட சட்டப்படி அதைச் சந்திப்பதை விட்டுவிட்டு, கோர்ட்டில் உண்மையை நிரூபிப்பதை விட்டுவிட்டு, நடவடிக்கையை எதிர்த்து ஓடி ஒளிந்தால் அதுவும் ஒரு குற்றமாகக் கருதப்படும் என்ற எளிய உண்மையை அறியாதவரா இவர் ????
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஜூன்-201708:05:58 IST Report Abuse
Srinivasan Kannaiya நீதியின் அரசராக இருந்த நீங்களே இப்பிடி செய்யலாமா? நீங்களே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் குற்றவாளிகள் எப்பிடி மதிப்பார்கள்? நீதிதுறைக்கே அவமானம் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
karunchilai - vallam,இந்தியா
21-ஜூன்-201708:01:16 IST Report Abuse
karunchilai At last arrested.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை