மோடி உயிருக்கு ஆபத்து: கேரள முதல்வர் ஒப்புதல் | Dinamalar

மோடி உயிருக்கு ஆபத்து: கேரள முதல்வர் ஒப்புதல்

Added : ஜூன் 22, 2017 | கருத்துகள் (36)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கேரளா, நரேந்திர மோடி, மோடி, திருவனந்தபுரம், கேரளா, மெட்ரோ ரயில் சேவை, முதல்வர் பினராயி விஜயன்,பயங்கரவாதிகள், டி.ஜி.பி., சென்குமார்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், போலீஸ், Modi, Narendra modi, kerala, Trivandrum, Kerala, Metro Rail Service, Chief Minister Pinarayi Vijayan, Terrorists, DGP, Senkumar, Marxist Communist, Police

திருவனந்தபுரம்: கேரளாவில், மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க வந்த, பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக, அந்த மாநில டி.ஜி.பி., சென்குமார் கூறிய கருத்துக்களை, முதல்வர் பினராயி விஜயன் ஒப்புக் கொண்டுஉள்ளார்.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். கொச்சியில், இம்மாதம், 17ல் நடந்த மெட்ரோ ரயில் சேவை துவக்க விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்நிலையில், பிரதமர் மோடி, கேரளா வந்திருந்த போது, அவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், அவரின் வருகையை ஒட்டி பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்ததாகவும், மாநில போலீஸ் டி.ஜி.பி., சென்குமார் கருத்து தெரிவித்திருந்தார்; இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டி.ஜி.பி., தெரிவித்த கருத்துக்கள் குறித்து, முதல்வர் பினராயி விஜயனிடம் பத்திரிகையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது, முதல்வர் விஜயன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, கொச்சி வந்த, 17ம் தேதி, அவரின் உயிருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது உண்மையே. இது குறித்து, போலீசார், என்னிடம் தெரிவித்தனர். எனினும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், அசம்பாவிதங்கள் நிகழவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.



மோடிக்கு அச்சுறுத்தல் இருந்தது: முதல்வர் ஒப்புதல்

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-ஜூன்-201717:32:01 IST Report Abuse
இந்தியன் kumar மோடிஜி இந்தியாவின் சொத்து , அவர் மாதிரி நல்ல தலைவர் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட இல்லை .
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
23-ஜூன்-201700:59:09 IST Report Abuse
yaaroகண்ணுக்கு எட்டிய தூரத்தில் கொஞ்சம் பேர் இருக்காங்க ..பாக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
22-ஜூன்-201713:18:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உண்மை என்று ஒத்துக்கொண்ட மங்குனி முதலமைச்சர் அந்த இயக்கத்தின் பெயர் என்ன , அவர்களை பிடித்துவிட்டார்களா ? என்று சொல்லாதது ஏன், கேரளாவில் நடந்து ஆட்சியை இழக்கவேண்டி வரும் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களே பேசி தடுத்துவிட்டார்களா ? அப்படியென்றால் மற்ற இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்களா ? இவர்களை நம்பாமல் தேசிய பாதுகாப்பு படையை அனுப்பி கூண்டோடு போட்டுத் தள்ளுங்கள். ஒரு முதலமைச்சரே ஒத்துக்கொண்டபிறகு அவர்களை விட்டுவைப்பது மிகவும் ஆபத்தானது.
Rate this:
Share this comment
Cancel
பாரதி - Chennai ,இந்தியா
22-ஜூன்-201712:33:53 IST Report Abuse
பாரதி மோடி உயிருக்கு ஆபத்து: கேரள முதல்வர் ஒப்புதல்-மோடி உயிருக்கு ஆபத்து என்றால் உண்மையான நாட்டு பற்றுள்ள மக்கள் வெகுண்டு எழுவார்கள். மோடி இப்போதைய தேவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X